Search This Blog

Aug 11, 2021

மூன்றாம் அலை???


மூன்றாம் அலை???





யூகானிலே பிறந்து உலகெங்கிலும் பறந்து 

-----பரவிய கிருமி இதுவே! - இது 

சாகா வரம் ஒன்று சாமியிடம் பெற்று 

-----சோகாப்பில் எமை ஆழ்த்துதோ?


"ஆகா இதைநாங்கள் அழிக்க மருந்தொன்றை 

-----அடைந்து விட்டோம்" என்கையில்- அழிந்து 

போகாமல் இன்னுமிது ஒன்றிரெண்டு மூன்றென்று 

-----அலைகளாய்ப் பாய்ந்து வருதே!


இரண்டாவ  தாமலையின் தாக்கத் தினால்  சிறிதும்  

----மிரண்டு போகா மலே- கூடித் 

திரண்டு தோளோடு தோளிடித் தேயடுத்த 

-----அலையினை வரவேற் கிறார். 


ஆல்பாவிலே தொடங்கி பீட்டா காமா பின்பு 

-----டெல்டாவென் றின்றா கியே- தனது  

தோல்மாற்றி நாள்தோறும் பால்மாறி நம்மையே 

-----ஏமாற்றி தினம் வாட்டுதே!


தாளிட்ட  கதவின்பின் நாள்முழுது மேயடைந்து 

-----மனம்நொந்து போகும் நிலையை - விட்டு

மீளவோர் வழிகாட்ட மும்மதக் கடவுளரை 

-----வேண்டியே வணங்கு கின்றோம்! 


அன்புடன் 

ரமேஷ் 

9 comments:

  1. ஆண்டவரே துணை. தடுப்பூசியும் உற்ற துணை.

    ReplyDelete
  2. மக்கள் தறிகெட்டு,நோய் பெற்று தவிக்காமலிருக்கவே,தக்க சமயத்தில்
    எச்சரிக்கும் விதமாக அமைந்தது உங்கள் கவிதை!அரசின் முயற்சிக்குத் தலை வணங்கி,
    கைவணக்கம் செய்து,கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து,தேவையான இடங்களில்,முடிந்தபோதெல்லாம் முகக்கவசம் அணிந்திடுவோம்.உணவு முறையில் தேவையான மாற்றங்கள் செய்து,நோய்எதிர்ப்பு கூட்டும்,இஞ்சி,எலுமிச்சை உணவில் சேர்ப்போம்.உழைப்போம் உற்சாகமாக.
    ஆண்டவன் துணையிருக்க வேண்டுதல் செய்வோம்!நலமுடனிஃஃஃடௐருப்போம்

    ReplyDelete
  3. நலமுடனிருப்போம்

    ReplyDelete
  4. ஆல்ஃபா, பீட்டா, டெல்டா வந்து விட்டது.
    காமா(காமா) வராமல் ஆண்டவனை இறைஞ்சுவோம்.வீரியம் கொண்டதல்லவோ!ஒரு சிறிய நாடான சிங்கப்பூரில் எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் தினம் நூறு தொற்று எங்கிருந்து வருகிறது என்று திண்டாடுகிறோம்.இறப்பு 35 என்றாலும் ஒழிக்க முடியவில்லையே?
    இயற்கையின் விளையாட்டோ?

    ReplyDelete
  5. தடுப்பூசியும் கடவுளின் அவதாரமா?
    இரண்டு தடுப்பூசிகளா அல்லது வெவ்வேறு தடுப்பூசிகளா? அப்படியென்றால் கிருமி என்ன சாத்தானா? விஞ்ஞானம் வெல்லுமா? கவசமணிந்து காத்திருப்போம்!

    ReplyDelete
  6. மக்கள் முக கவசத்தை அணிந்து , இடவெளியை அனுசரித்து, அடிக்கடி கைகளை ‘சானிடைஸ்’ செய்து கூட்டமான இடங்களை தவிர்த்தால் இந்த அலையிலிருந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  7. The last verse clearly brings out our despondency and frustration!

    ReplyDelete