அப்பாக்கள் தினம்
இன்று அப்பாக்கள் தினம் கொண்டாடப் படுகிறது.
சமூக வலைத்தளங்களில் உதவியால் இன்று இது சற்றுப் பிரலபம் அடைந்திருந்தாலும், அம்மாக்கள் தினத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு அளிக்கப்படுவதில்லை என்பதே பல அப்பாக்களின் குறை!
"ஒப்புக்குச் சப்பாணி, ஊறுகாய்க்கு மாங்கொட்டை" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது!
இது குறித்து ஒரு நான்கு வரிப் பாடல்!
அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
ரமேஷ்
தப்பாமல் தாயார் தினத்தை நினைப்போரும்
அப்பாவி அப்பாக்கள் நாளை மறந்திடுவார்
முப்பொழுதும் மக்கட் கவர்செய்யும் தொண்டிற்கு
எப்போ கிடைக்கும் ஒப்பு!
புரியவில்லை ரமேஷ்! விளக்கம் தேவை
ReplyDeleteஅப்புறபடுத்தபட்டாலும் அப்பாவாகவே இருக்க
Deleteஆசைபடுகிறேன் ஏனென்ரால்
ஆப்பம் சுட வேண்டாமே!
Partiality 😞
ReplyDeleteரமேஷ்,
ReplyDeleteஅருமை,அருமை.அப்பாக்கள் தினத்திற்கும்
விரைவிலேயே ஒப்புதல் கிடைக்கும்.