Search This Blog

Jun 18, 2021

ஐயா! ஜாலி!!

ஐயா! ஜாலி!!

அரசு தற்போது அறிவித்து இருக்கும் ஊரடைப்பு விதித் தளர்வுகளால் நம் "குடிமக்கள்" உற்சாகத்தில் ஊறித் திளைக்கிறார்கள் - டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் !

கடைகளில் திருவிழாக் கூட்டம்! 

முகக் கவசம் போடலையா?
------அது எதுக்கு?
சாராய விலையை அதிகமாக்கி விட்டார்களே?  
------கவலையில்லை!
தடுப்பூசி போட்டாச்சா? 
------அதுக்கு யாரு பணம் கொடுப்பாங்க? ஒசியிலே கிடைச்சா சரி!

ஈச்வரோ ரக்ஷது ! ( இறைவன்தான் காக்கவேண்டும் !)

இது குறித்து சில வெண்பாக்கள்!

அன்புடன்

ரமேஷ்





பேஸ்மாஸ்க்கை எப்போதும் போடாமல் கூட்டமாய்

டாஸ்மாக் கடையிலே முந்துவார் ---- ஈஸ்வரனே

வந்துரைத் தாலும் திருந்தார் இவரைநாம் 

நொந்தென்ன காண்போம் பயன்?

                                                                                                                          (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ஏராள மாகவே என்னவிலை சொன்னாலும் 

ஆராய்ச்சி சற்றுமே செய்யாம லேயுடன் 

தாராள மாய்ப்பணத்தை தாரைவார்த் தேதருவார்

சாராயச் சாருண்ப வர்!

                                                                                                       (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

எவ்விலை ஆயினும் வாங்கிக் குடிப்பார்

உயிர்குடிக்கும்  சாராயச் சாரை  - உயிர்காக்கும்

ஊசியைப் போடவே நூறுதடை சொல்லுவார்

ஓசியாய் வாராத தால்!

                                                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)



9 comments:

  1. Saraya char...nice word! Great!

    ReplyDelete
  2. Govt should have followed the British model and offered a "free quarter" for people who get vaccinated. There would have been 100% compliance !!

    ReplyDelete
  3. ABSOLUTELY APT.
    என்று தணியும் இந்த சாராய மோகம்!
    Sunder

    ReplyDelete
  4. வெண்பக்கள் அருமை நண்பா.மதுப்பிரியர்களை சாராயச் சாருண்பவர் எனக்கூறிவிட்டீர்கள்.கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்.

    ReplyDelete
  5. ரமேஷ்,
    டாஸ்மாக் கடைகள் திறந்ததால்
    ' குடிமகன்களுக்கு ' வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.ஆனால் சமுதாயத்திற்கும் ( முக்கியமாக
    குடும்ப தலைவிகளுக்கும் ) இதனால் தொல்லைகள்தான் உண்டாகும்.கொரானா
    கட்டுப்பாடுகளை மதிக்காத 'குடிமகன்களால்' நோய் பரவும் பெரிய
    அபாயமும் உள்ளது.நீங்கள் கூறியது
    போல ஈஸ்வரனே வந்து கூறினாலும்
    அவர்கள் திருந்த மாட்டார்கள்.
    நல்ல கவிதை.

    ReplyDelete
  6. சாராயச் சாருண்பவர் என்பவர் யார்?
    அன்றாடக்காய்ச்சிகள் களைப்புத்தீர
    சாருண்பவரா? லுங்கி கட்டி சாராயமே வாழ்க்கை என்று எண்ணி டாஸ்மாக்கே கதி என்று இருப்பவரா அல்லது இவர்களல்லாது மேல் குடி மக்களா? GR

    ReplyDelete
  7. வெண்பாக்கள் அருமை.சாராயச் சாரும் கொரோனாவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது (அலை மோதிக் கொண்டல்லவா வாங்குகிறார்கள்) என்று புரிந்து கொண்டால் ஏதாவது ஒன்று குறையலாம்.கவிதை அருமை.

    ReplyDelete