Search This Blog

Jun 15, 2021

கிண்டி பாம்புப் பண்ணை

கிண்டி பாம்புப் பண்ணை

சென்னையில் வசிப்பவர்களுக்கும், சென்னைக்கு வருபவர்களுக்கும் , அந்தக் காலத்தில் , பார்க்கவேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாக  இருந்தது கிண்டியில் இருக்கும் பாம்புப் பண்ணை.

பாம்புகளிடமிருந்து விஷத்தை எடுத்து, அவ்விஷத்தையே பாம்புக் கடிக்கு மாற்று மருந்தாக மாற்றும் பணியும் இங்கு நடைபெருகிறது.

இன்று , ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் வருவது முற்றும் தடைப்பட்டு , வருமானமின்றி , அங்குள்ள பாம்புகளுக்கு இரையளிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது என்பது இன்றைய பத்திரிகைச் செய்தி.

நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டி, இதைப் பற்றிய ஒரு பாடலுடன் 

அன்பன் 

ரமேஷ்

Name of the Account : Chennai Snake Park Trust 
A/C.No. : 10792456546 
Name of the Bank : State Bank of India, SME Branch, Adyar


ஆலத்தை* யேமாற்றி ஔடதமாய்** ஆக்கிவிடும்      *ஆலம் = நஞ்சு**ஔடதம் = மருந்து 

ஜாலத்தை செய்கின்ற சர்ப்பச் சதுக்கத்தில் *                *சர்ப்ப சதுக்கம் = பாம்புப் பண்ணை 

பாலூட்ட பாம்பிற்கு காசில்லை ; இன்றதுதன்  

காலூன்றி நிற்கா நிலை.

                                                                                                                      (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)




11 comments:

  1. வருவாய் இன்றி சீர்குலைந்து இருக்க
    பாம்பால்கூட சீர முடியாமல் தவிக்கும்
    நிலமயை மாறி மக்களால் சீராட்டூம்
    நிலை எப்போ வரும் நண்பா!

    வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. ஆகா! அருமை.

      Delete
    2. நன்றி- ஆனால் ஒரு காலும் பாம்பிர்கு காலூன்றி நிற்கா நிலை வராது எனென்றால் "பாம்பின் கால் பாம்பிர்க்குதான் தெரியும்" என்கிறார்களே !🤔

      Delete
  2. அரசுதான் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வாயில்லா ஜீவன்கள் வாடக்கூடாது.

    ReplyDelete
  3. When the state government has so many schemes and hands over freebies frequently, it should also come to the rescue of its institutions by helping them financially. Public contributions also can also help to feed the hapless reptiles confined inside the four walls.
    Your poem is heart rending and shows the plight of the snake park.

    ReplyDelete
  4. அந்த பரமசிவன் தான் வரவேண்டும்.
    கவிதை நன்று.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Very correctly reflects the plight of these reptiles! 👍

    ReplyDelete
  6. This is the responsibility of Government .

    ReplyDelete
  7. You are kind even to the poisonous snakes.Good poem.👌👌

    ReplyDelete
  8. Thanks Mano. I am unable to see your poems now-a-days! How to see them in Pratilibi?

    ReplyDelete
  9. Sad state of affairs . State government should take responsibility of running this place, without corruption creeping in. A feat which I have is the politicians trying to usurp the land in prime location of Madras ...

    ReplyDelete