Search This Blog

May 22, 2021

கோலம்

அதிகாலையில் சாலையில் நடை பழகும்போது கண்ட ஒரு காட்சியைப்  படம் பிடித்தேன் - 

என் கேமராவால் மட்டுமல்ல, கவிதையால் கூட! 

அன்புடன் 

ரமேஷ் 


கோலம் 




தள்ளாத வயதினிலும் உள்ளார்வம் குறையாமல் 

வெள்ளி முளைக்குமுன்னே பள்ளி விட்டெழுந்து 

தள்ளிக் குப்பைகளை வாசல் தெருக்கூட்டி 

தெள்ளிய நீர்பிடுத்து வாளியிலே  நிரப்பி 

உள்ளங்கை பள்ளத்தில் அள்ளி அதை எடுத்து 

மெள்ளமெல்லத் தெளித்து தெருவாசல் கூட்டிப்பின் 

எள்ளளவும் பிசகாமல் புள்ளிக் கணக்கிட்டு 

வெள்ளைப் பொடித்தூவி வரைகின்றாள் மாக்கோலம்!

26 comments:

  1. A very common every day event captured and presented very well ! Ramesh you have become an excellent Kavigner. Had writer Sujatha were to be alive, he would have presented you with some of his famous books.

    ReplyDelete
    Replies
    1. Ha Ha ! Good to have such well meaning friends , though your comment is a hepwrbole!

      Delete
    2. அரிசி மாவினால் கோலமிட்டு எறும்புகளுக்கு உணவு படைத்தும், காலை வேளையில் எழுந்து ஓசோனைச் சுவாசிக்க வாய்ப்புமாய், உடல் வளைத்து உடலுக்குப் பயிற்சியுமாய், புள்ளிகளை இணைப்பதில் மனதினை ஒருங்கிணைப்பதாய் வாழ்வுமுறைக்கு வழி சொன்ன இப்பழக்கத்தைப் பல இடங்களில் காண இயலவில்லையே, நண்பரே !

      Delete
  2. ரமேஷ்,
    கோலத்தை நேரே கண்ட நிறைவை
    ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. மனோ, உங்கள் பாராட்டு என் உள்ளத்தை நிறைக்கிறது! நன்றி!

      Delete
  3. கவிதையா கேமராவா (camera ) எதை முன் பாராட்டுவது , தெரியவில்லை

    ReplyDelete
  4. அள்ளி பறுகினேன் உங்கள் கவிதையை. தெள்ள தெரிந்தது, உள்ளத்தை கவர்ந்தது, உங்கள் கவிதை வளம்!!

    ReplyDelete
  5. மேற் கண்டதை கூறியவர் அடியேன் வெங்கடராமன்.

    ReplyDelete
    Replies
    1. உன் பாராட்டே ஒரு கவிதையாய் இருக்கிறதே! நன்றி!

      Delete
  6. Very simple and short,bringingout something you see in many houses,(though notallthese days....sadly)

    ReplyDelete
  7. Nice poem capturing a normal activity of daily routine 👍

    ReplyDelete
  8. Seeing beauty and happiness in simple day to day events is the best way to motivate oneself - especially during current difficult times. Yes, the Kolams of intricate designs are fascinating. Next time, please capture the Kolams also and embellish with your kavithai.

    ReplyDelete
  9. Yes! Remember the Tedtalk I sent ? My camera had some juice , in the form of this poem!

    ReplyDelete
  10. வயோதிக காலத்திலும் வாசலில் நீர் தெளித்துக் கோலமிடும் அழகை படத்துடன் அதற்குக் அருமையான கவிதையும். வாழ்த்துக்கள் ரமேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, சங்கரலிங்கம்!

      Delete
  11. Your kavithai itself is like a kolam

    ReplyDelete
  12. Amanullah
    Very good Ramesh.Keep it up.

    ReplyDelete
  13. Velli, Thalli, Pulli, Alli....so good!

    ReplyDelete
  14. I never realised that there are so many nuances in kolam till I read your “ kolam “. Brilliantly piece of poetry!

    ReplyDelete
  15. மிக மிக அருமை ரமேஷ் ������

    ReplyDelete