மணநாள் வாழ்த்து
இன்று என் பள்ளித்தோழன் எம்.என் .ராமசாமியின் ஐம்பதாவது மணநாள்!
ராமசாமி - ரேவதி தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ரமேஷ்
பூதப் பாண்டி எனும்சிற் ரூரிலுன்
காதல் மனைவியின் கைத்தலம் பற்றி
அரைநூ றாண்டுகள் ஆகும் இன்னாளில்
நிறைவுடன் வாழ நண்பனின் வாழ்த்து!
ஒருவரோ டொருவர் புரிதல் பெருக்கி
இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்தீர் !
குடும்ப வாழ்வில் ஒருசில நேரம்
இடுக்கண் வருகையில் இணைந்தெதிர் கொண்டீர்!
இருகரு விழியிணை* இருபெண் மகவை *விழி இணை
பெற்றே வளர்க்கும் பெரும்பே ருற்றீர் !
பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய
வெற்றிபெற் றவரும் வாழ்வினில் சிறந்தார்!
எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய்
முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை,
உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு
தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!
அருமை அருமை
ReplyDeleteஅருந்தமிழ் வாழ்த்து
மிக்க நன்றி, பாபாராஜ் அவர்களே!
DeleteSuperb
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்குவிக்கும். நன்றி!
Deleteவழக்கம் போல் அருமை. என் பொறாமைக்கு உரியவர் நீங்கள் - சுந்தர்
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்குவிக்கும். நன்றி!
Deleteஅருமையான கவிதை ரமேஷ்.👌👌👌
ReplyDeleteமிக்க நன்றி, மனோ!
Deleteஎன் இனிய நண்பனே,
ReplyDeleteநீயும் மற்றும் நம் நண்பர்கள் ராம்மோகன், கோபால் உடன் இருந்து வாழ்த்தி ஐம்பது ஆண்டுகள் முன் இனிதே ஆரம்பித்த என் இல்வாழ்வினை மகிழ்வுடன் நினைவுகூறுகிறேன் . அந்நாளிற்கு 12 ஆண்டுகள் முன் துடைங்கிய நம் நட்பு எனும் நல்வாழ்க்கை வாழப்போகும் எஞ்சிய காலத்திற்கும் நன்மையும் இனிமையும் பயக்க இறைவனைக் கோரி , உன் இனிய திமிழ்ச் சொற்களால் வாழ்த்துக் கூறியமைக்கு நானும் என் மனையாள் ரேவதியும் உளம் நிறைந்த நன்றியினை தெருவித்துக் கொள்கிறோம் .
அன்புடன்
ராமசாமி
அருமை . வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி,நண்பனே!
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteமிக்க னன்ரி, ராம்கி!
DeleteA beautiful ode to your friend on the golden jubilee year. A great gift to the lovely couple!
ReplyDeleteThank You , B.V. Hope all is well with you and you are keeping safe!
DeleteBeautiful greetings Ramesh! Best wishes to your friends Mr Ramaswamy and his wife... Always a delight to read your poems.
ReplyDeleteBeautiful greetings Ramesh! Best wishes to your friend Mr Ramaswamy and his wife. It’s always a delight to read your eloquent poems.
ReplyDelete