புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சார்வரி ஆண்டின் ஊர்வலம் முடிந்து
பிலவம் உலவத் தொடங்கும் இந்நேரம்
கலவரம் ஊட்டும் கொடுநோய்த் தாக்கம்
உலகினை விட்டு அகலவே வாழ்த்து !
சுலபம் இல்லை இச்செயல் எனினும்
பிலவ ஆண்டும் விலகும் வரையில்
வாயையும் மூக்கையும் நன்றாய் மூடி
நோய்பர வுதலை நிறுத்திட வாழ்த்து.
முகத்தைக் கவசம் மூடிய போதும்
அகத்தை அனைவரும் அகலத் திறந்து
மதமின மொழியெனும் வேற்றுமை மறந்து
நிதமும் நலமுடன் வாழநல் வாழ்த்து!
அன்புடன்
ரமேஷ்
நல்லதொரு இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
ReplyDeleteNice one Ramesh. Let’s us hope our prayers and wishes come true in this yet another New year.
ReplyDeleteஅருமையான கவிதை,ரமேஷ்
ReplyDelete👏👏👏
Excellent! Wishing a very happy healthy Tamil New Year!
ReplyDeleteநன்றி . புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல கவிதை ரமேஷ்.
ReplyDelete