படிக்கப்படும் புத்தகங்கள் -- கொரானா பாசிடிவ் -2
சென்னையில் ஜூன் மாதக் கடைசி வரை வீட்டடைப்பு என்று உறுதியாகிவிட்டது!
இதற்கு முன் பல்வேறு புத்தகக் காட்சிகளில் வாங்கப்பட்டு இன்னும் படிக்கப்படாத
- ஏன், பிரிக்கவும் படாத - புத்தங்கள் பல, புதுப் புத்தகங்களுக்கே உரிய வாசனையுடன் என் வீட்டில் இருப்பது போல், உங்கள் எல்லார் வீட்டிலும் நிச்சயமாக இருக்கும்!
அவற்றைப் படித்து முடிக்க ஒரு வாய்ப்பு, இந்த இறுதி வீட்டடிப்பில் கொரானா தந்திருக்கிறது.
இது மற்றொரு கொரானா பாசிட்டிவ்!
வாய்ப்பை நழுவிடாமல் புத்தகங்களை படித்துப் பயனடையுங்கள்!
இது மற்றொரு கொரானா பாசிட்டிவ்!
வாய்ப்பை நழுவிடாமல் புத்தகங்களை படித்துப் பயனடையுங்கள்!
அன்புடன்
ரமேஷ்
காலை தொடங்கி மாலை வரையில்
வேலையில் மட்டும் மூளையைச் செலுத்தி
நாளை நாமிதைப் படிக்க லாமென
மூலையில் குவித்த புத்தகம் எடுத்து
காலைக் கால்மேல் போட்டு அமர்ந்து
தாளைப் புரட்டி தடவிக் கொடுத்து
ஒட்டி இருக்கும் தாள்களின் ஊடே
சுட்டு விரலினை மெல்ல நுழைத்து
பக்கங்கள் ஏதும் கிழியா வண்ணம்
அக்கறை யோடு பிரித்து விலக்கி
பத்தினிப் புத்தகப் பக்கங்கள் பரப்பும்
அத் தனி மணத்தை நாசியில் நுகர்ந்து
சூலை* மாதம் தடைகள் விலகி * July
ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்
வேளை வருமுன் படித்து முடிக்க
காலத் தடைகள் எதுவுமின் றில்லை!
வீட்டில் நம்மைப் பூட்டிய வியாதியால்
விளையும் நன்மையில் இதுவும் ஒன்றே!
வேலையில் மட்டும் மூளையைச் செலுத்தி
நாளை நாமிதைப் படிக்க லாமென
மூலையில் குவித்த புத்தகம் எடுத்து
காலைக் கால்மேல் போட்டு அமர்ந்து
தாளைப் புரட்டி தடவிக் கொடுத்து
ஒட்டி இருக்கும் தாள்களின் ஊடே
சுட்டு விரலினை மெல்ல நுழைத்து
பக்கங்கள் ஏதும் கிழியா வண்ணம்
அக்கறை யோடு பிரித்து விலக்கி
பத்தினிப் புத்தகப் பக்கங்கள் பரப்பும்
அத் தனி மணத்தை நாசியில் நுகர்ந்து
சூலை* மாதம் தடைகள் விலகி * July
ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்
வேளை வருமுன் படித்து முடிக்க
காலத் தடைகள் எதுவுமின் றில்லை!
வீட்டில் நம்மைப் பூட்டிய வியாதியால்
விளையும் நன்மையில் இதுவும் ஒன்றே!
Excellent. I am doing that only.
ReplyDeleteஅருமையான கவிதை ரமேஷ்.நானும் உங்களில் ஒருவன்தான்(புத்தகம் வாங்கி பிரிக்காமல் வைத்திருப்பதில)என்பதில் ஒரு அற்ப மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி . ஞாபக படுத்தியுள்ளிர் .
ReplyDeleteRamesh you have penned realistically what each one of us is doing besides being a substitutefor the domestic help.
ReplyDeletetrue . Resolving to clear the backlog in reading , but very little progress
ReplyDelete