பல நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பிரதோஷப் பாடல்!
அன்புடன்
ரமேஷ்
பிரதோஷப் பாடல் - 33
ஆதி சங்கரர் காசியில் கங்கையில் நீராடிய பிறகு கோயிலுக்குச் செல்லுகையில், எதிரே ஒரு புலையன் கையில் நான்கு நாய்களுடன் வருகிறான். அவன் கோவிலுக்குப் பூசை செய்யச் செல்லும் தன்மீது பட்டு வீடாக கூடாதே என்று சங்கரர் அவனைத் தள்ளிப் போ, தள்ளிப் போ என்று கூறுகிறார்! அது கேட்ட அப்புலையன், சங்கரரைக் கேட்கும் கேள்வி இது.
ஏ முனிபுங்குவரே! என்னைத் தீண்டாத தகாதவன் என்று கருதி, தள்ளிப் போ , தள்ளிப் போ என்று சொல்லுகிறீர்களே, எதைத் தள்ளிப் போகச் சொல்லுகிறீர்கள்? உணவை உண்டு ஆக்கப்பட்ட என்னுடைய இந்த உடலை, அதே போன்று உணவை உண்டு ஆக்கப்பட்ட உங்கள் உடலிலிருந்தா, அல்லது என்னுள்ளிருக்கும் ஆத்மாவை உங்களுக்குள்ளிருக்கும் ஆத்மாவிலிருந்தா? கூறுங்கள்!
O great ascetic! Tell me . Do you want me to keep a distance from you, by uttering ’go away’ ’go away’ taking me to be an outcaste ? Is it addressed from one body made of food to another body made of food, or is it consciousness from consciousness — which, O, the best among ascetics, you wish should go away, by saying “ Go away, go away”? Do tell me.
இது கேட்ட சங்கரர் , புலையன் வடிவில் வந்து தனக்கு அறிவு புகட்டுவது சிவபெருமானே என்று உணர்ந்தார். தான் உணர்ந்ததை மானிஷா பஞ்சகம் என்ற பெயரில் ஒரு பாடலாகப் புனைந்தார்.
சங்கரருக்கு புலையன் வடிவத்தில் வந்து சிவபெருமான் உபதேசித்த நிகழ்வைப் பற்றியது .
இது குறித்த பாடல் , இன்றைய பிரதோஷ தினத்தன்று!
"தள்ளிப்போ தள்ளிப்போ" என்றேநீ சொல்லுவதென்
உள்ளிருக்கும் ஆத்மனையா தோல்போர்த்த யாக்கையையா
சொல்லிடென்ற கேள்வியினால் சங்கரரின் கண்திறந்த
தில்லைஜக தீசன் துணை
( பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ஊள்கண்களை என்கிற சொல் பொருத்தமாக இருக்கும் அல்லவா?
ReplyDeleteThanks for your comment. Would like to discuss this with you. Can you call me at 9840009720 or post a more detailed comment in my mail id vramesh3132@gmail.com?
DeleteGreat message . Thanks . I appreciate your blog always brief . Brevity is the soul of wit . You are great
ReplyDeleteVery crisp explanation giving the meaning fully .
ReplyDeleteAnna arumai
ReplyDeleteThe awakening of Adi Shankara very beautifully narrated!
ReplyDelete