Search This Blog

Apr 28, 2020

ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.


ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.

இன்று சங்கர ஜெயந்தி - 
ஆதி சங்கரர் அவதரித்த நாள்!
சில வருடங்களுக்கு முன் எழுதிப் பதித்த  இந்தப்  பாடலை  மீண்டும் பதிப்பிக்கிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 




வரைந்தவர் : ரமேஷ் 



நிறைநீர்   நெற்றியன்    மறைஉரை   பெற்றியன்
பிறைமுடி   தரித்தவனின்   பெயர்பெற்றவன்.
சிறுபரு   வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம்   பூண்டிட்ட   முனிபுங்கவன் .


ஆத்மாக்கள்  பரமனும்   ஜீவனும்   ஒன்றென்ற
அத்வைத   தத்வத்தை   போதித்தவன் .
பௌத்தரையும்   ஜைனரையும்  வாதித்து  வென்றதால்
இந்துமத  மேன்மையை  சாதித்தவன் .


வேதங்கள்   அறிந்ததன்  சாரங்களைப்  பிழிந்து
கீதகோ  விந்தமாய்  கற்பித்தவன் .
காதங்க  ளைக்கடந்து  நாடெங்கி  லும்நடந்து
சங்கர   மடம்நான்கை   நிறுவிட்டவன் .

புலையன்   உருவில்வந்த   மலையன்  கண்திறக்க
மாநீஷ   பஞ்சகப்  பாப்புனைந்தவன் .
கைலயங்   கிரிசென்று   ஈசனைப்   பூசித்து
சௌந்தர்ய   லகிரியைப்    பெற்றிட்டவன் .


காஞ்சிபுரி   வந்திருந்து   காமாட்சி   யைத்தொழுது
கோவிலில்   ஸ்ரீசக்ரம்   ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய   பீடத்தில்   குருவாக   வந்தமர்ந்து
அடியார்கள்   மனமெங்கும்   வ்யாபித்தவன்.

பாமரர்க்கும்   புரியும்வண்ணம்  பக்தித்   தோத்திரங்கள்
பாவடிவில்   பண்ணுடன்   புனைந்திட்டவன் .
நேமமிகு   பண்டிதரும்   படித்தறிந்து   பண்படவே
பாஷ்யங்கள்  பலப்பலவும்   தந்திட்டவன் .

தாமரைக்  கண்ணினள்  காமாட்சி அருள்பெற்று
காமகோடி   மடம்   உருவாக்கினான் .
நாமெல்லாம்  சேமமுற   நல்வழிகள்   காட்டியபின் 
மோட்சபுரி   காஞ்சியிலே  சித்தியடைந்தான்.

6 comments:

  1. நன்றி
    ஹர ஹர சங்கரா.

    ReplyDelete
  2. Excellent as usual. You have brough out all the significant aspects/achievements in a good rhyme.
    Regards
    SUNDER

    ReplyDelete
  3. Nice and timely reproduction of your earlier blog. However there are different views on whether Aadhi Sankarar really established the Kanchi madam.
    Never knew you were a talented artist as well.Keep up the good work. Thiagu

    ReplyDelete
  4. அன்புள்ள ரமேஷ்

    உன் முதற் பதிப்பை நான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை .
    ஆனால் இன்று மறு பதிப்பை பார்த்தேன்.

    உன் கை வண்ணம் நன்றே தெரிந்தது இரண்டிலுமே :

    அவர் படத்தை வரைதலிலும்
    அவரை பற்றி பாடல் இயற்றிதழிலிலும்
    .
    உன்னை மெச்சிக்கொண்டே இருக்கும்
    உன் நண்பன்
    ராம்மோகன்

    ReplyDelete
  5. Lovely. Adi Shankara’s life in a nutshell. In my opinion he is the greatest man who walked on this earth.

    ReplyDelete