பிரதோஷப் பாடல் - 32
திருவலிதாயம்
திருவலிதாயத் தலப் பாடல்
பிருஹஸ்பதி பெற்றமகன் பரத்து வாசன்
----------பிரம்மனிடம் தான்பெற்ற சாபம் ஏற்று
கருநிறச் சிறுபறவை வலியன் என்னும்
----------கரிக்குருவி உருவெடுத் திவ்வுலகை அடைந்து
வருடம்பல உருண்டோடிச் சென்ற பின்னே
----------இத்தலத் தேயுறையும் இறையருளி னால்
உருமாறி உய்ததால் இத்தல முமே
----------திருவலி தாயமெனப் பெயர்பெற்ற தாம்
திருவலிதாயம்
இறைவன் - ஸ்ரீ வலிதாய நாதர், ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தாயம்மை, ஸ்ரீ ஜகதாம்பிகை
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
தல விருட்சம் - பாதிரி, சரக்கொன்றை
இன்றைய பிரதோஷப் பாடல் சென்னைக்கு அருகே இருக்கும் பாடியில் அமைந்திருக்கும் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பற்றியது.
என்னுடைய பிரதோஷப் பாடல்களை தவறாமல் படித்து ஊக்குவித்து வரும் கல்லூரி நண்பர் ராமகிருஷ்ணனின் தூண்டுதலால் இந்தத் தலத்தைப் பற்றிய தகவல்களை படித்தறிந்து எழுதிய பாடல் இது.
வலியன் என்று கூறப்படும் கரிக்குருவியாக உருவெடுத்து , இந்தத் தளத்தில் இறைவனை வழிபட்டு பரத்துவாச முனிவர் சாபவிமோசனம் அடைந்ததால் இன்திருவலிதாயம் என்ற பெயரைப் பெற்றது.
இது பற்றிய முழு தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.
இதுபோல திருவிளையாடல் புராணத்தில் கரிக்குருவி ஒன்றுக்கு இறைவன் அருளிய வேறு ஓர் கதையும் உண்டு!
அது பற்றிய பாடல் பின்னொரு நாளில்.
அன்புடன்
ரமேஷ்
திருவலிதாயத் தலப் பாடல்
பிருஹஸ்பதி பெற்றமகன் பரத்து வாசன்
----------பிரம்மனிடம் தான்பெற்ற சாபம் ஏற்று
கருநிறச் சிறுபறவை வலியன் என்னும்
----------கரிக்குருவி உருவெடுத் திவ்வுலகை அடைந்து
வருடம்பல உருண்டோடிச் சென்ற பின்னே
----------இத்தலத் தேயுறையும் இறையருளி னால்
உருமாறி உய்ததால் இத்தல முமே
----------திருவலி தாயமெனப் பெயர்பெற்ற தாம்
Nice sthala Puranam thro your kavithai
ReplyDeleteSuper composition of the song covering story of the shiv sthalam. Best wishes. NRS
ReplyDelete