Search This Blog

Mar 26, 2020

கொரானா பாடல் - 5

கொரானாக்  காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு முழு அடைப்பை அறிவித்த அடுத்தநாளே, கடைகளில் கூட்டம் அலைமோதியது --

வேண்டியது, வேண்டாதது என்று பாராமல் எல்லாப் பொருள்களையும்  வாங்கி வைத்துக்கொள்வதற்காக!

எங்கே போயிற்று நம் சமூகப் பொறுப்பு?

இது பற்றி--

அன்புடன்

ரமேஷ் (கனித்தோட்டம் )

கொரானா பாடல் - 5

கழிந்தது ஓர்நாள் இன்று,  
-----கொரானா காய்ச்சலை  முற்றும்
அழித்திட நாமே அளித்த  
-----இருபத் தோர்நாள் கெடுவில்.

சேதிகள் பலவும் பரவும்,
-----பல்தளப் பதிவுகள் மூலம்.  
ஏததில் உண்மையென் றறியோம் 
-----பீதிகள் அடைதல் தவிர்ப்போம் 

தடையினை மீறி வீட்டின் 
-----வட்டம்  விட்டுச் சென்று 
கடைகளில் முட்டி மோதிப்  
-----பொருள் வாங்கிக் குவித்தல் ஏனோ ?

தேவையை மீறிப் பொருள்கள் 
-----வாங்கி வைப்பதைத்  தவிர்ப்பீர் 
நீவிர் இந்நாளில் செய்யும் 
-----சேவையில் சிறந்தது இதுவே!

அறுசுவை உணவுகள் தினமும் 
-----அடைவது குறைந்ததால் என்ன?
நொறுக்குத் தீனி வகையைத் 
-----நாள்சில தவிர்த்தால் என்ன?

மருந்தென உணவை எண்ணி 
-----உண்பதைச் சற்றே குறைத்து 
இருப்பதை வைத்து இன்னும் 
-----இருபது  நாட்கள் கழிப்போம் 

தெருவினில் உலவுதல் நீக்கி 
-----சமூகத் தழுவல் தவிர்ப்போம் 
வருவது நலமாய் நிகழ 
-----இறைவனை வேண்டி இருப்போம்!





5 comments:

  1. Dear Ramesh,
    A timely, well worded advise. Hope you will get several followers like me.
    SUNDER

    ReplyDelete
  2. அன்புள்ள ரமேஷ்

    சரியான சாட்டையடி கொடுத்தாய் சமூக பொறுப்பு
    தெரியாமல் அவசர தேவைக்கு வேண்டாத பொருள்களை வாங்கி குவித்து
    தலைகால் புரியாமல் வினைகளை செய்யும் இவர்கள்
    வைரஸ் கருணாவால் அவதிப்படுவாரோ !

    அன்புடன் ராம்மோகன்

    ReplyDelete
  3. Yes Mr. Ramesh, very timely advice poetically. Best wishes for more poems. Regards NRS

    ReplyDelete
  4. Kettadhum koduppavane Krishna,Krishna,
    Ketkaamale koduppavane,korana,korana

    ReplyDelete