நண்பர் பில்ஹணன் கல்லூரி வாட்ஸ்-அப் தளத்தில் பகிர்ந்த இந்த ரங்கோலிச் சித்திரத்தைப் பார்த்ததும் எழுந்த ஒரு பாடல் இதோ!
அன்புடன்
ரமேஷ்
(கனித்தோட்டம்)
உள்ளத்தை கொள்ளை கொள்ளு மழகு - விழிப்
பள்ளத்தில் விழுந்தாற்பின் மீள்வதரிதே !
மின்னுகின்ற கண்ணோரம் வழிகின் றதே - அப்
புன்னகையின் மிச்சமித ழோரத்திலே!
மாசுமரு இல்லாத முகம் நடுவிலே - ஒளிர்
நாசியும் நறுமணத்தை வீசுகிறதே!
மோனோ லிசாவுடைய புன்னகை யையே - இவள்
தானோ அவளுக்கு தந்துதவினாள் ?
தேனூறும் உதட்டகழைப் போற்றி மட்டும் - பாடல்
நானூறு நற்புலவர் தீட்டுவாரே!
இனித்திடும் இவள்முகம் கனவு களிலே வந்து
இனித்தினமும் உறக்கத்தைப் போக்கிவிடுமோ !
நிக்கழுவுகள், புரிவில்லை.
ReplyDeleteமழகு
ழோரத்திலே
யையே
கவிதையின் முதல் வரியாக வரலாமா?
ஜீ.ஆர்
I think a portion of your comments have got cut.Unable to ,ake out. Can you check and repost?
ReplyDeleteNothing else Ramesh, was only wondering about lines starting as mentioned above. Are they as per Tamil grammar?
Deleteஅருமை
ReplyDeletenice one
ReplyDeleteBoth the painting and your apt poem are EXCELLENT!
ReplyDelete