திருக்கருகாவூர் கருக்காத்த அம்மன் ( கர்பரக்ஷாம்பிகை ) கோவிலில் துலாபாரம் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றிய நிகழ்வின்போது எழுதிய பாடல், அங்கு எடுத்த படத்துடன்!
இந்தத் தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முல்லைவன நாதர் மற்றும் கருக்காத்த அம்மன் பற்றிய தலவரலாறு பற்றிய பாடல் அடுத்த பதிவுகளில் தொடரும்.
அன்புடன்
ரமேஷ்
துலாபாரம்
முல்லை வனத்தில் தானாய் முளைத்தெழுந்த* மூலவர்மேல்
அல்லல்கள் அகன்றிடவே அர்ச்சனைகள் செய்திட்டு,
பிள்ளை வரம் கேட்போர் விருப்பத்தை நிறைவேற்றி
உள்வளரும் ஒளிச் சுடராம் கருப்பத்தை காப்பாற்றி,
அழகியதோர் குழவியினை அளித்திட்ட அம்பிகையை
தொழுதவளின்^ திருமேனிக் கபிஷேகம் செய்திட்டு
மகன்மகளின்# நிகரெடையாய்** பழக்குவியல் படைத்திட்டு
மகிழ்வுடனே பிரார்த்தனைகள் செய்து முடித்தோமே !
*தானாய் முளைத்தெழுந்த = ஸ்வயம்பூ
^ தொழுதவளின்=தொழுது அவளின்
# மகன்மகளின் = மகனுடைய மகள்; பெயர்த்தி
** நிகரெடை= equal weight

Nice . our Best wishes for your Grand daughter
ReplyDeleteVery nice
ReplyDeleteLot of happiness seen on your face and family members faces show how much you enjoyed this Tulabaram. Poem as usual Great! Best wishes to your grand daughter.
ReplyDelete