தன்வந்திரி ஆலயம்
சென்ற வாரம் கோவைக்குச் சென்றிருந்தபோது, நண்பர் மஹாதேவனிடம் அங்கு பார்க்க இடங்களை பற்றி வினவினேன்.
அவர் பரிந்துரைத்த இடங்களில் ஒன்று " தன்வந்திரி ஆலயம்"
அங்கு சென்று வழிபட்டவர்கள் நோய்கள் முற்றும் குணமடையும் என்று கூறிய அவர், மேலும் "அங்கு சென்று வழிபட்டு அதைப் பற்றிய பாடல் ஒன்றையும் எழுதலாமே " என்று கூறினார்!
அவர் வேடிக்கைக்குக் கூறியிருந்தாலும் , கோவில் சென்று தொழுகையில், ஒரு பாடல் உதித்தது.
அப்பாடல் , ஒரு வெண்பா வடிவில் !
அன்புடன்
ரமேஷ்
பின் குறிப்பு :
தன்வந்திரி இந்து மதத்தில் , மருத்துவத்திற்குக் கடவுளாகவும், ஆயுர்வேதத்தின் தந்தையாகவும் கருதப்படுகிறார்.
தன்வந்திரி ஆலயம்
முன்வந்த நோய்த்துயரம் முற்றிலும் நீங்கிடவும்
பின்வந்து நோய்பலவும் பீடித்தல் நீக்கிடவும்
தன்வந்த்ரி கோயிலின் சன்னதியின் முன்னமே
நின்றுமன மொன்றி வணங்கு
( ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

Brief & Excellent
ReplyDeleteThanks. That is the beauty of the வெண்பா format. Though the grammatical rules which define a வெண்பா are a bit difficult to execute ( atleast for me!) , It forces you say what you want in four lines. Of course, the குறள் is better, with just two lines!
Deleteஅன்பா
ReplyDeleteஉன் தன்வெவந்திரி வெண்பாமாலை அருமை.
ராம்மோகன்