Search This Blog

Oct 8, 2019

தனிவீடும் கூட்டுக் குடும்பமும்

தனிவீடும் கூட்டுக்  குடும்பமும் 

ஒரு காலத்தில் தோட்டம்-துறவி , மாடம்-முற்றம்  என்று கட்டப்பட்டிருந்த தனி வீடுகள் இன்று ஒன்றன் ஒயின் ஒன்றாய் சிதைக்கப்பட்டு , அவை இருந்த இடங்களில் பன்மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதைக் காண்கிறோம். 
தனிவீடுகளில்  பாட்டன்-பாட்டி, அத்தை -சித்தி, மாமன்-மச்சான் என்று பல உறவுகளோடும் வாழ்ந்திருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கும் இன்று விடைகொடுத்தாகி விட்டது!
சிதைந்துவரும் இந்த கடந்தகாலக்  குறியீடுகளைப் பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு : இது உங்களுக்குத் பிடித்தால், இதைத் தழுவி முன்னம் நான் எழுதியுள்ள " தனி வீடு ஒன்று தவமிருக்கிறது" என்ற பாடலையும் படியுங்கள் .
https://kanithottam.blogspot.com/2016/06/blog-post_25.html








அடுக்கு அடுக்காயோர்  பன்மாடிக்  கூடம் 
நெடுக  உயர்ந்தே   எழுகையில்பாழ்  ஆவதுவும்  
தோட்டம்  துரவுள்ள  வீடொன்று   மட்டுமோ?
கூட்டுக்  குடும்பமும் தான் .

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ரமேஷ் (கனித்தோட்டம்) - 8-10-2019

No comments:

Post a Comment