Search This Blog

Oct 6, 2019

தேடல்கள்



தேடல்கள்

சேருமிடம் எங்கென்றும்  போகும்வழி எதுவென்றும்
புரியாது வெறித்த கண்ணும்

வேருவை நீர்த்துளிகள் வழிந்து விழுந்ததால்
நீறழிந்த பாழ் நெற்றியும்

ஊருலகம் துறந்து உறவுகளை மறந்து
மழிக்காது செழித்த முடியும்

சீருடையாய் காவியும் அணிந்து அலையுமிவன்
தேடல்கள் என்று முடியும் ?


ரமேஷ் (கனித்தோட்டம் )    6-10-19

No comments:

Post a Comment