Search This Blog

Oct 31, 2019

வாழ்த்துகள்

வாழ்த்துகள் 

தீபாவளி நாளுக்கு முன்னரும் பின்னரும் வலைத்தளத்தின் மூலமாக பலருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பி இருப்பீர்கள்.அதேபோல் வலைதளத்தின் வழியாக வந்து  குவியும் வாழ்த்து மழையிலிருந்தும் இப்போது  மீண்டிருப்பீர்கள்.

முகநூல், வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துவது மிகச் சுலபமாக ஆகிவிட்டது. பலருக்கும் வாழ்த்துச்  செய்திகள் அனுப்ப முடிகிறது.

இருந்தாலும் -

பண்டிகை நாளன்று உறவினர் வீட்டுக்குச் சென்று வாழ்த்தும் வழக்கம், பக்கத்துக்கு வீட்டுக்காரர்களையாவது பார்த்து வாழ்த்துவது -- இவைகள் எல்லாவற்றையும் இந்த முகநூல் வழிவாழ்த்தும்  வழக்கம் அழித்துவிட்டதே!

இது பற்றி இரண்டு வெண்பாக்கள்.

இரண்டுக்கும் ஒரே கருத்துதான்.

பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 



வாழ்த்துகள் 

அக்கத்துப்  பக்கத்து  அண்டை அயல்வீட்டு  
மக்களை எல்லாம் மறந்து - முகநூலில் 
திக்கெட்டும் உள்ளார்க்கும் தட்டச்சி லேதட்டி   
வக்கணையாய் வாழ்த்துகிறார் இன்று 

( ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)


முகத்தினைப் பார்த்து சிரித்தே மகிழ்ந்து 
சுகமா  யெனக்கேட்கும் நாள்போய்- முகநூலில் 
தட்டெழுத்து அச்சடித்து  எத்திக்கும்  உள்ளார்க்கும்
தட்டுகிறோம்  வாழ்த்துக்கள் இன்று 

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
   




No comments:

Post a Comment