சிவகாசி அவலம்
சிவகாசி அவலம்
சுற்றுப் புறச்சூழல் கெட்டு விடுமென்று
முற்றும் வெடிகள் தடுத்தோரே- சற்றும்
சிவகாசி பாட்டாளி கள்பற்றி எண்ண
அவகாசம் உண்டோ உமக்கு?
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
இந்தியத் தலைநகரில் சுற்றுபுறச் சூழல் மிக மோசமடைந்து, உடல்நிலை கேடு குறித்த நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான ஒரு முக்கிய காரணம் அண்டைய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பின் மிஞ்சும் அரிதாள்களை எறிப்பதுதான். இது நன்றாகத் தெரிந்தும் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதற்கெடுத்தாலும் தொடையத் தட்டிக்கொண்டு குதித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடும் மக்கள் நல அமைப்புக்களும் இதற்காக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை.
அதே சமயம் , வருடத்துக்கு ஒருமுறை தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை எதிர்த்து உயர்நீதி மன்றத்ட் தடை உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள்!
இந்தத் தடையின் காரணமாக, சிவகாசியில் ஆறு லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள்! இதைப் பற்றி யார் வருத்தப்படுகிறார்கள் ?
"ஊருக்கு இளைத்தவன் பெருமாள் கோயில் ஆண்டி" என்ற பழமொழியைத்தான் இது நினைவூட்டுகிறது!
இது பற்றி ஒரு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
சிவகாசி அவலம்
சுற்றுப் புறச்சூழல் கெட்டு விடுமென்று
முற்றும் வெடிகள் தடுத்தோரே- சற்றும்
சிவகாசி பாட்டாளி கள்பற்றி எண்ண
அவகாசம் உண்டோ உமக்கு?
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
No comments:
Post a Comment