Search This Blog

Oct 2, 2019

பிரிவு

பிரிவு

இந்தப் புகைப்படத்தைக் கருவாக வைத்து இரண்டு நாட்களுக்கு முன் " ஊடல்" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருந்தேன்.
இந்தப் படத்தை வேறோர் கோணத்தில் நோக்கி " பிரிவு" என்ற தலைப்பில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன்.

படித்து கருத்தைத் தெரிவியுங்கள்.

அன்புடன் 

ரமேஷ் 





வண்ணம் துறந்து வெள்ளை அணிந்து
கண்ணில் வடியும் நீரோடு
எண்ணம் முழுதும் எனையே  எண்ணி
ஏங்கி இருக்கும் என்னவளே!


உடலைப் பிரிந்து விண்ணில்  பறந்து
உன்னை நானும் பிரிந்தாலும்
கடலில் அலையாய் அலையின் நுரையாய்
உன் கால் தழுவுவது  உணர்வாயோ ?


இற்றைப் பிறவியில் உனைப் பிரிந்தாலும்
பிற்பல பிறவிகள் தவறாமல்
வந்துனை அடைவேன் சந்ததம் சேர்வோம்
எந்தன் உயிரே கலங்காதே !


ரமேஷ் ( கனித்தோட்டம் ) 30-9-2019

10 comments:

  1. Even though this kavidhai on the same photo is also nice, waves are so far away that they will not touch her feet

    ReplyDelete
  2. ஊடலும் உள்ளப் பிரிவும் உணர்ச்சியின்
    தேடலாய்ப் பாவாக பாவலனின்---ஊடறுத்துச்
    சிந்தனையின் ஏக்கப் பிழிவைத் தெளித்தில்
    நெஞ்சம் நெகிழ்ந்ததே துவண்டு.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான கவிதைப் பாராட்டு! புலவர் பாபாராஜுக்கு நன்றி.

      Delete
  3. Reminds me "Mannavane azhalama" song....

    ReplyDelete
  4. What led you to sit aloof. Where my next meal will come from. Return soon ...

    ReplyDelete
  5. comment from my friend Ramaswamy and my reply --
    உன் கவிதைகள் இரண்டையும் படித்தேன் . இரண்டுமே உள்ள வெளிப்பாடு ஆயினும் , பிரிவு என்னை கவிதைக்காக கவர்த்தந்து. பிரிவு என்ற தலைப்பை தேர்தெடுத்ததற்கான காரணத்தில் எனக்கு மாற்று கருத்து உண்டு. வெள்ளை உடை அணிந்ததால் அந்த மங்கை கணவனை இழந்தவள் என்ற வெளிப்பாடு, சமுதாயத்தின் பிற்போக்கான எண்ணத்திற்கு உனது ஒப்புதல் அளித்தது போல் இருக்கிறது. நண்பன் என்ற உரிமையில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளேன். விளக்கம் தந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
    அன்புடன் இராமசாமி


    Ramesh V
    6:36 AM (0 minutes ago)
    to Ramaswamy

    இந்தப் படத்தை கருவாக வைத்து நான் எழுதிய இரு பாடல்களில் ஒன்றான ஊடல் இக்கருத்தைப் பிரதிபலிக்கவில்லை.
    ஆனாலும், அடுத்த பாடலில் நீ கூறியது போல் அப்பெண்ணை கணவனை இழந்தவளாகச் சித்தரித்திருக்கிறேன். படத்தில் அவள் முகம் தெரியாததால் , மற்ற குறியீடுகளை வைத்தே அவள் உள்ளத்தை உணர முடிகிறது. அவள் ஒன்று கோபமாக இருக்கிறாள் அல்லது துயரத்தில் இருக்கிறாள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது, இந்த வெள்ளை ஆடைக்கும் , முகம் காட்டாமல் அவள் இருப்பதற்கும் இந்த இரண்டு உணர்வுகளே பொருந்தும் என்று நினைக்கிறேன். அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று நினைத்து பாடல் எழுதியிருந்தால் சற்று அபத்தமாக இருக்கும். சோகம் + வெள்ளையுடை, அவள் கணவனை இழந்து இருப்பவள் என்ற முடிவுக்கு வரச் செய்கிறது.. காலம் காலமாக வெள்ளையுடை தேவதைகளையும் அல்லது கைம்பெண்களையும் அடையாளம் காட்டுவதாகவே உள்ளது. நெற்றியில் பொட்டு இல்லாததும் , தலையில் பூ அணியாததும் இவ் வகையைச் சேர்ந்தவையே! இவைகள் அனைத்தும் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட குறியீடே. கணவனை இழந்த அனைவரும் வெள்ளை உடை அணியவேண்டும் என்ற கருத்து இதில் வெளிப்படுத்தப்படவில்லை. இப்பழக்கம் சமூகத்தை விட்டுச் சென்று பல நாட்களாகிவிட்டது.

    ReplyDelete