Search This Blog

Oct 5, 2019

தமிழ்ப் பேச்சில் பிறமொழிச் சொற்கள்

தமிழில் பேசுகையில் வேற்று மொழி - குறிப்பாக ஆங்கிலம் - சேர்த்துப் பேசுவது மிகுந்து வருகிறது. இதை முற்றும் தவறு என்று நான் கருதவில்லை. ஆனால், பல சமயங்களில்  இது தமிழில் ஆங்கிலம் கலப்பதற்குப் பதிலாக, ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுவதாக அமைந்திருக்கிறது. 
தேவையான இடத்தில்  மட்டும்  ஆங்கிலச் சொற்களை உபயோகிக்க வேண்டும்.
இதுவே என் கருத்து.

அன்புடன்
ரமேஷ்


தமிழ்ப் பேச்சில் பிறமொழிச் சொற்கள் 

நேற்றுத்தான் நாற்றுவிட்ட வேற்றுமொழிச் சொற்களையும் 
சேர்த்துக்கொண்டால் குற்றமென்ன அம்மொழிக்கே அதுபெருமை 

தாய்மொழியே எம்மொழிக்கும் தமிழேதான் என்பதனால் 
சேய்மொழியின் சொற்கள்சில சேருவதில் குற்றமுண்டோ?

வாய்மொழியில் பேசுகையில் வார்த்தைக்கு வார்த்தையிடை 
வேற்றுமொழிச் சொற்கள்பல மிகவாகப் புகுத்தாமல்

தேவைக்கு மட்டுமான சிலசொற்கள் சேர்ப்பதிலே 
தவறேதும் இல்லையென்பேன் தாழ்மையுடன் என்கருத்து 

ரமேஷ் (கனித்தோட்டம்)   4-10-19

1 comment: