Search This Blog

Oct 11, 2019

பிரதோஷப் பாடல்- 24

பிரதோஷப் பாடல்- 24

இன்றைய பிரதோஷப்  பாடல் , இறைவனை வணங்கி

அன்புடன்

ரமேஷ் .


பெருகும் கங்கையை  விரிசடை யில்தரித்து தெய்வ தரிசனம் தருபவனே
ஒருகால் மடித்து உயர்த்தி நிறுத்தி  திருச்சபை தனில்நடம் புரிபவனே
திரிபுரம் எரித்து அரக்கரை அழித்து தேவரைக் காத்த உமைபங்கா
தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது புரிந்த   பிழைபொறுத்து அருள்வாயே!

2 comments: