Search This Blog

Sep 7, 2018

பிரதோஷப் பாடல் - 10 Pradosham Song 10

பிரதோஷப் பாடல் - 10




இன்று பிரதோஷம்.

இன்றைய பிரதோஷப் பாடல்  கைலாய மலையைத் தூக்க முயன்று தோல்வியுற்ற  ராவணன் தன்  தவறை உணர்ந்து அரனை வேண்டிப் பிழைத்த கதையைப்  பற்றியது.

இராவணன் சிறந்த சிவபக்தன்.
ஒரு சமயம், குபேரனைப் போரில் வென்ற பின் , வான்வீதி வழியாக ராவணன் திரும்புகையில் நந்தி அவன் வழியைத் தடை செய்தார். 
"இது சிவபெருமான் குடியிருக்கும் கைலாயம். இதைக் கடந்து செல்லல் இயலாது. சுற்றியே செல்லவேண்டும்" என்று அவர் கூறியதை ஏற்காமல் 
தலைக் கனம் மிகுந்ததால், " அந்த சிவன் குடியிருக்கும்  மலையையே இவ்விடத்திலிருந்து பெயர்த்து விடுகிறேன் " என்று அதைத்  தூக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் தன் விரலால் மலையை அழுத்த,  அதன் அடியில் சிக்கித் தவித்தான் ராவணன். தன்  தவறை உணர்ந்து, தன் ஒரு தலையைக் கொய்து, அதனோடு தன்  உடலின் நரம்புகளை எடுத்து வீணையாகச் செய்து மீட்டி, சிவனைத் துதித்தான்.
மகிழ்ந்த சிவபெருமானும் அவனை விடுவித்து அருள் செய்தார்.

இந்த நிகழ்ச்சியை விளக்கும் ஒரு பாடல் இன்றைய பிரதோஷத்தில்.

அன்புடன் 

ரமேஷ் 

பிரதோஷப் பாடல் - 10

கயிலாய மலையைத்தன் கைகளா லேயசைக்க
இயலாமல் இடுக்குற்ற ராவணனும்- தயங்காமல்
நரம்பெடுத்து  நாண்பூட்டி  நல்வீணைக் கீதத்தால்
அரன்புகழ்  பாடியுய்த் தான் 
                                                                 ( வெண்கலிப்பா )

No comments:

Post a Comment