சூரி 60
அகவை அறுபது ஆண்டுமுடித்து
அடுத்த ஆண்டில் அடிவைத்த
சூரியநாரா யணனெனும் சூரி!
சீரிய வளமுடன் வாழ்ந்திடுக.
எங்கே இருந்தோ வந்தான் இவனே
பெற்றது அவனை பெருந்தவமே
என்றே அன்று கண்ணனைப்பற்றி
பாரதி பாடிய பாடலைப் போல்
முதியோர்க் கெல்லாம் சேவகனாய்
இளையோர்க் கெல்லாம் காவலனாய்
மதிமொழி கூறும் மந்திரியாய்
குறைகளைத் தீர்க்கும் தந்திரியாய்
தம்பி, தமையன் மாமன்,மருகனாய்
நம்பிக் கைதரும் நண்பனுமாய்
பரிமா ணங்கள் பலவும்எடுத்து
பரிமளம் வீசும் பண்புடையான்
உடல்நலம் புஜபலம் நிலபுலம்மனநலம்
எனப்பல நலமுனைச் சேர்ந்திடவும்
ஆண்டுபல தாண்டி ஈண்டு நீவாழ
ஆண்ட வனைநான் வேண்டுகிறேன் !
அகவை அறுபது ஆண்டுமுடித்து
அடுத்த ஆண்டில் அடிவைத்த
சூரியநாரா யணனெனும் சூரி!
சீரிய வளமுடன் வாழ்ந்திடுக.
எங்கே இருந்தோ வந்தான் இவனே
பெற்றது அவனை பெருந்தவமே
என்றே அன்று கண்ணனைப்பற்றி
பாரதி பாடிய பாடலைப் போல்
முதியோர்க் கெல்லாம் சேவகனாய்
இளையோர்க் கெல்லாம் காவலனாய்
மதிமொழி கூறும் மந்திரியாய்
குறைகளைத் தீர்க்கும் தந்திரியாய்
நம்பிக் கைதரும் நண்பனுமாய்
பரிமா ணங்கள் பலவும்எடுத்து
பரிமளம் வீசும் பண்புடையான்
உடல்நலம் புஜபலம் நிலபுலம்மனநலம்
எனப்பல நலமுனைச் சேர்ந்திடவும்
ஆண்டுபல தாண்டி ஈண்டு நீவாழ
ஆண்ட வனைநான் வேண்டுகிறேன் !
No comments:
Post a Comment