குட்டிக் குரங்குகள் கும்மாளம்
எல்லா சிறிய குழந்தைகளுக்கும் மிகவும் பிடடித்த ஒரு ஆங்கில குழந்தைகள் பாட்டு "Five Little monkeys jumping on the Bed". இதைத் தமிழ்ப்படுத்தி எழுதப் பட்டது இந்தப் பாட்டு!
கட்டிலுக்கு கேடுதான் என்றாலும், சில தமிழ் வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ளட்டுமே!
அன்புடன்
ரமேஷ்
குட்டிக் குரங்குகள் கும்மாளம்
குட்டிக் குரங்குகள் ஐந்தும் குதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து குரங்கொன்று விழுந்து
தலையில் பட்டது பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்குகள் நான்கும் குதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து குரங்கொன்று விழுந்து
தலையில் பட்டது பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்குகள் மூன்றும் குதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து குரங்கொன்று விழுந்து
தலையில் பட்டது பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்குகள் இரண்டும் குதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து குரங்கொன்று விழுந்து
தலையில் பட்டது பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்கு ஒன்று குதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து குரங்கொன்று விழுந்து
தலையில் பட்டது பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
கட்டிலின் மேலே படுக்க வைத்து
கட்டிப் போடு என்றாராம் !
---------------
அன்பிற்குரிய இரமேஷ், ஒசைநயத்திற்காகச் சிறு திருத்தம். எண்ணிப்பாருங்கள்.
ReplyDeleteகுட்டிக் குரங்கு ஐந்துகுதித்து
கட்டில் மேலே கும்மாளம்
கட்டிலில் இருந்து ஒருகுரங்கு
விழுந்து பட்டது தலைக்காயம்.
அம்மாகுரங்கு மருத்துவர் அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும்கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்கு நாலுகுதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து ஒருகுரங்கு
விழுந்து பட்டது தலைக்காயம்.
அம்மாகுரங்கு மருத்துவர் அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்கு மூணுகுதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து ஒருகுரங்கு
விழுந்து பட்டது தலைக்காயம்.
அம்மாகுரங்கு மருத்துவர் அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்கு ரெண்டுகுதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து ஒருகுரங்கு
விழுந்து பட்டது தலைக்காயம்.
அம்மாகுரங்கு மருத்துவர் அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
சும்மா கட்டிலில் மேலும் கீழும்
இனிமேல் குதிக்கக் கூடாதாம்
குட்டிக் குரங்கு ஒன்றுகுதித்து
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில் இருந்து ஒருகுரங்கு
விழுந்து பட்டது தலைக்காயம்.
அம்மாகுரங்கு மருத்துவர் அழைக்க
அவரும் அப்போ சொன்னாராம்
கட்டிலின் மேலே படுக்கவைத்து
கட்டிப் போடு என்றாராம் !
Great..
ReplyDelete