தோல் கண்டார் -------
தோல் கண்டார் -------
பாலதன் நிறமே வெண்மை
நீலமே வானின் வண்ணம்
இலையெலாம் பச்சை என்று
நிலைத்தவண் ணங்கள் தந்தான்.
மாந்தரின் மேல்தோல் நிறமோ
ஒருநிறம் என்றில் லாமல்
மாநிறம் வெள்ளை கருப்பென
ஏனிந்த இறைவன் தந்தான்?
தோல்கண்டார் தோலே காண்பர்
மேல்கொண்டு எதையும் காணார்
தோள்திறம் சொல்திறம் மற்றும்
நூல்திறம் இவற்றை விலக்கி
தோல்நிறம் மட்டும் பார்த்து
தாழ்வாக அவரை எண்ணும்
தாளிட்ட மனது படைத்த
மனிதரும் பலரிங் குண்டு
பூநிறம் பற்பல எனினும்
தேன்உள்ளே உள்ளது என்று
தேனீக்கள் அறியும் வண்ணம்
மானுடர் ஏன் அறிவதில்லை?
தோலென்ற உறையை உரித்தால்
உள்ளுள்ள தெல்லாம் ஒன்றே
மேலவர் தாழ்ந்தவ ரென்று
பால்பிரித் தறிதல் என்னே?
சில நாட்களுக்கு முன் , தேஜஸ் இலக்கியக் குழுவின் கூட்டத்தில் டாக்டர் திரு.முருகுசுந்தரம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. தமிழ் ஆர்வலரும் தோல் துறை மருத்துவருமான இவர் யாணர் என்ற ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருவதுமட்டுமின்றி , சருமத்தைப் பற்றிய ஒரு தமிழ் மருத்துவ இதழையும் பதிப்பித்து வருகிறார். அதைப் படித்த தாக்கத்தினாலோ என்னவோ, தோலைப் பற்றிய ஒரு கவிதை உருவானது!.
பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி!
அன்புடன்
ரமேஷ்
தோல் கண்டார் -------
பாலதன் நிறமே வெண்மை
நீலமே வானின் வண்ணம்
இலையெலாம் பச்சை என்று
நிலைத்தவண் ணங்கள் தந்தான்.
மாந்தரின் மேல்தோல் நிறமோ
ஒருநிறம் என்றில் லாமல்
மாநிறம் வெள்ளை கருப்பென
ஏனிந்த இறைவன் தந்தான்?
தோல்கண்டார் தோலே காண்பர்
மேல்கொண்டு எதையும் காணார்
தோள்திறம் சொல்திறம் மற்றும்
நூல்திறம் இவற்றை விலக்கி
தோல்நிறம் மட்டும் பார்த்து
தாழ்வாக அவரை எண்ணும்
தாளிட்ட மனது படைத்த
மனிதரும் பலரிங் குண்டு
தேன்உள்ளே உள்ளது என்று
தேனீக்கள் அறியும் வண்ணம்
மானுடர் ஏன் அறிவதில்லை?
தோலென்ற உறையை உரித்தால்
உள்ளுள்ள தெல்லாம் ஒன்றே
மேலவர் தாழ்ந்தவ ரென்று
பால்பிரித் தறிதல் என்னே?
உங்கள் தோல்காப்பியம் படித்து மெச்சினோம்.
ReplyDeletemikka nanri!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதோலின் தொல்காப்பியர் எங்கள் ஆருயிர் அண்ணன் முருத்துவர் முருகுசுந்தரம்.
ReplyDeleteஇது உங்கள் தோல் பொருள் ஆராய்ச்சியோ
ReplyDeleteHi, how are you? Back in circulation? Got an intimation sometime back that you are not available for 6 months or so!
Deleteஅன்புள்ள ரமேஷ்
ReplyDeleteநீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .
மனதின் உள்ளே கருப்பு இருப்பதால் தான்
வெண்குஷ்டம் நபரை கண்டால் ஒதுங்குகிறாரோ .
கருத்தான பெண்ணைக்கூட கருப்பு என்பதால்
முகம் சிவந்து முகம் சுளிக்கிறாரோ ! அதனால் பெண்ணை
பிடிக்கவில்லை என்ற பச்சை பொய்யை சொல்லுகிறாரோ !
வண்ணத்தை மறந்து எண்ணத்தை மாத்திட இந்த மனித
சமூகம் என்று மாறுமோ!
உன் இனிய நண்பன் ராம்மோகன்