Search This Blog

Feb 5, 2018

வெறுமை



வெறுமை 

என் பெங்களூர்ப் பேத்தி , 
இரண்டு வார இருப்புக்குப்பின்
நேற்று மீண்டும் பெங்களுர் திரும்பினாள்.

கீழே இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருள்கள்
பெட்டியில் அடைக்கப்பட்டு
மீண்டும் பரணை ஏறின.

அவளை  
அமர்த்தி உணவூட்டும் குழந்தை நாற்காலியும்*      *high chair
அவள் படுத்திருந்த எடுப்புக் கட்டிலும்* ,                     *portable pram
மீண்டும் மடிக்கப்பட்டு 
பெட்டிக்குள் பதுங்கின.

மாடிப்படிகளுக்குப்  போடப்பட்டிடுந்த
தடுப்புக் கதவு எடுக்கப்பட்டுவிட்டது.

அவள்  சென்னைக்கு விஜயம் செய்யுமுன்
அவசர  அவசரமாகக்  காலி செய்யப்பட்ட

அலமாரிகளின் அடித்தட்டுகளும் ,

வரவேற்பறையில் நிறைந்திருந்து,
பின் மறைக்கப்பட்ட  விந்தைப் பொருள்களும்*,       *curios

கைக்கெட்டும் தூரத்தில்  இருந்து  எடுத்து
மேலே வைக்கப்பட்ட மின்ணனுக் கருவிகளும்*         *electronic goods 

மீண்டும் அவையவைகளின் இடத்தில்வைக்கப்பட்டு 

வீடு நிறைந்துவிட்டது.
ஆனால் 
மனம் மட்டும் 
வெறுமையாகிவிட்டது.

7 comments:

  1. I can appreciate your feelings,since I am also a grandfather like you.

    ReplyDelete
  2. உண்மையான உணர்வுகள், எழுத்து வடிவத்தில் பார்த்தபொழுது கண்கள் நிறைந்தன

    ReplyDelete
  3. வீட்டில்தான் வெறுமை இரமேஷ், அவளுடன் நீங்கள் கழித்த ஒவ்வொரு கணமும் மனதில் நிறைந்திருக்குமே!கண்களுக்கு மட்டுமே வெறுமை ஆனால் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்தால் அவளுடைய பெருந்ததிரைப்படமே ஓடுமே மனதில்! PRN

    ReplyDelete
  4. -மகன் எங்களுடனே இருப்பதால் இல்லை நாங்கள் அவனுடனே இருப்பதால் பேத்திகள் எங்களுடனே இருக்கிறார்கள் அதனால் இல்லை வெறுமை. ஆனாலும் ஓரிரு நாட்கள் நாங்கள் வெளியே சென்றாலும் அவர்கள் வெளியெ சென்றாலும் தெரிகிறது அந்த வெறுமை. ஆயிற்று ஏப்ரல் வந்ததும் பள்ளி விடுமுறை. ஒன்றரை மாதம் அவர்கள் கோவை சென்று விட்டால் நிசப்தமாக வைத்தது வைத்த இடத்தில் இருக்கும் மியூசியம் போன்ற வீடுதான் என்னை வரவேற்கும் மாலையில் நான் வீடு திரும்பும்போது!

    ReplyDelete