திருவிளையாடல் பாடல் -7 - குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது )
விருந்தினர் எல்லோரும் விருந்துண்ட பின்னரும் பெருமளவு மிகுந்த படியால்
வருந்திடும் மீனாட்சி யினைநோக்கி சிரித்துசிவன் பெருத்ததன் கணத்தை அழைத்து
கருத்தகுண் டோதரனின் வயிற்றிலே வடவைத்தீ ஏற்றிப்பெறும் பசியைத் தூண்ட
இருக்கும் உணவையெலாம் கொஞ்சமும் மிஞ்சாமலே மொத்தமும் தின்று தீர்த்தான்
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது )
விருந்தினர் எல்லோரும் விருந்துண்ட பின்னரும் பெருமளவு மிகுந்த படியால்
வருந்திடும் மீனாட்சி யினைநோக்கி சிரித்துசிவன் பெருத்ததன் கணத்தை அழைத்து
கருத்தகுண் டோதரனின் வயிற்றிலே வடவைத்தீ ஏற்றிப்பெறும் பசியைத் தூண்ட
இருக்கும் உணவையெலாம் கொஞ்சமும் மிஞ்சாமலே மொத்தமும் தின்று தீர்த்தான்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் பொருள் :
Story in Tamil
பாடல் பொருள் :
வந்த விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு சென்றபின்னும், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பெருமளவில் மிகுந்துவிட்ட படியால், தடாதகைப் பிராட்டியார் வருத்தமுற்றாள். இது கண்ட சிவபெருமான் தன கணங்களில் ஒருவனும், பெருத்த வயிறோடும் , கரிய நிறத்தோடும் காணப்படுவனுமான குண்டோதரன் என்பானை வரவழைத்து , அவனது வயிற்றிலே பசியைப் பெருக்கும் வடவைத்தீயை ஏற்றி, அவனுக்கு உணவு படைக்குமாறு பணித்தார். பெரும் பசியால் பிணிக்கப்பட்ட குண்டோதரனும் அங்கு இருக்கும் எல்லா வகை உணவுகளையும் தின்று தீர்த்தான்.
திருமணத்திற்கு வந்திருந்த அரசர்கள், முனிவர்கள், அந்தணர்கள் மற்ற விருந்தினர்கள் அனைவரும் வயிறார உண்டு தகுந்த சன்மானங்களைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுச் சென்றனர். அதன் பிறகு , தடாகைப் பிராட்டியாரை வந்து வாங்கிய பணியாளர்கள், " அன்னையே, நாங்கள் சமைத்திருந்த உணவில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட செலவழித்த வில்லையே?" என்று வருத்தத்துடன் கூறினர். இது கேட்ட அன்னையும், சிவபெருமானிடம் சென்று, " அய்யனே, தங்கள் கணங்கள் அனைவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் விருந்துண்ண வருவார்கள் என்று நினைத்து சமைக்கப்பட்டிருந்த உணவுகள் அப்படியே மிகுந்து விட்டனவே?" என்று உரைத்தார். சிவபெருமானும் ஒரு புன்னைகையுடன் " வருந்தற்க" என்றுரைத்து , தன கணங்களில் ஒருவனான குண்டோதரன் என்பானை உணவுண்ண வரவழைத்தார். அது மட்டுமின்றி அவனது வயிற்றிலே பெரும் பசியைத் தூண்டும் வடவைத்தீயினை ஏற்றவும் செய்தார்! அதனால் பெரும் பசியடைந்த குண்டோதரன், சமையலறையில் இருந்த அத்தனை வகை உணவுப் பொருள்களையும் தின்று தீர்த்தான். அதன் பிறகும் பசி அடங்காமல் "இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்!" என்று தவித்தான்!
Story in English :
All the guests including The Kings, the Sages and the brahmins who had come , left after having a sumptuous lunch and after receiving suitable presents. After their departure, the cooks, who had prepared the feast met Devi Thadaathagai and told her - " O Queen, even after all the guests have been fed, not even one-thousandth of the food prepared by us has been consumed ! ". She in turn went to Lord Shiva and told him " My Lord, we were expecting all your entourage including the Devas numbering Thirty Three Crores to come and had prepared the food to cater to all of them! But now all this may go to waste!". The Lord smiled at her and asked her not to worry. He then called one of his celestial helpers by name Gundotharan, to come and directed the cooks to feed him! The cooks led Gundotharan to the kitchen and he , in whose stomach the Lord has lit the Fire of Hunger, devoured all the food in the kitchen! Even after all the food has disappeared, he was still hungry and wanted more to eat !
No comments:
Post a Comment