இதுவும் NPA தான் !
இதுவும் என்பீஏ (NPA) தான் !
வங்கிகளில் நீயும் நானும்
-----சேமித்த பணத்தை எல்லாம்
தங்குதடை ஏதும் இன்றி
-----தகிடுதத்தப் பேர்வழி களுக்கு
விடுமிகுதொகை* ஏதும் இன்றி
-----கடனாகத் தாரை வார்த்து
வட்டியும் முதலும் அழிந்து
-----என்பீஏ என்றே ஆச்சு!
அன்பையே விதையாய் விதைத்து
-----ஆசையாய்ப் பயிரை வளர்த்து
பின்னொரு காலம் தன்னில்
-----அன்பையே அறுவடை செய்ய
எண்ணியே எதிர்பார்த் திருக்கும்
-----தந்தையைத் தாயை மறக்கும்
எண்ணற்ற மகன்கள் மகள்கள்
-----இவர்களுமே என்பீ ஏதான்.
வரிப்பணத்தை வாரி விட்டு
-----வங்கிகளின் என்பீஏவை
மறுமதிப் பீடுசெய்ய**
-----மூலதனம் செய்யுது அரசு.
தன்னுறவால் தள்ளப் பட்டு
-----தவிக்கின்ற தந்தை தாயின்
என்பீ ஏக்களை மீட்டுத்
-----தருவதற்கு வழியெதும் உண்டோ?
* - margin money
**- recapitalisation
சில நாட்களுக்கு முன்னால் வெளிவந்த ஒரு தகவல், நீரவ் மோடி என்ற வைர வியாபாரியும் அவர் குடும்பத்தினரும் பஞ்சாப் தேசிய வங்கியை 1100 ரூபாய் கோடி அளவிற்கு ஏமாற்றியிருப்பது. ஏற்கனவே பெரிய அளவு NPA வுடன் தவிக்கும் இந்திய வங்கிகளுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இது இன்னும் ஒரு பெரிய இடி. எல்லாரையும் போல் , நீரவ் மோடியும் இந்தியாவை விட்டு வெளியேறி எதோ ஒரு அயல் நாட்டில் பதுங்கிவிட்டார்.
எப்போதும் போல், அரசாங்கமும் பெரிய குரல் எழுப்பி " அவரைப் பிடித்துவிடுவோம்" என்று மார்தட்டும்.
பிறகு வழக்கம் போல் வங்கிகள் இழந்த பணத்தை நம்முடடைய வரிப்பணத்திலிருந்து எடுத்து தாரை வார்த்துவிடும்.
இது வாடிக்கையாகப் போய்விட்டது.
ஆனால் இந்த கவிதை வேறு ஒரு NPA வைப் பற்றியது.
படித்துப் பாருங்களேன்.
அன்புடன்
ரமேஷ்
இதுவும் என்பீஏ (NPA) தான் !
வங்கிகளில் நீயும் நானும்
-----சேமித்த பணத்தை எல்லாம்
தங்குதடை ஏதும் இன்றி
-----தகிடுதத்தப் பேர்வழி களுக்கு
விடுமிகுதொகை* ஏதும் இன்றி
-----கடனாகத் தாரை வார்த்து
வட்டியும் முதலும் அழிந்து
-----என்பீஏ என்றே ஆச்சு!
அன்பையே விதையாய் விதைத்து
-----ஆசையாய்ப் பயிரை வளர்த்து
பின்னொரு காலம் தன்னில்
-----அன்பையே அறுவடை செய்ய
எண்ணியே எதிர்பார்த் திருக்கும்
-----தந்தையைத் தாயை மறக்கும்
எண்ணற்ற மகன்கள் மகள்கள்
-----இவர்களுமே என்பீ ஏதான்.
வரிப்பணத்தை வாரி விட்டு
-----வங்கிகளின் என்பீஏவை
மறுமதிப் பீடுசெய்ய**
-----மூலதனம் செய்யுது அரசு.
தன்னுறவால் தள்ளப் பட்டு
-----தவிக்கின்ற தந்தை தாயின்
என்பீ ஏக்களை மீட்டுத்
-----தருவதற்கு வழியெதும் உண்டோ?
* - margin money
**- recapitalisation
Super. That you have written only on the love & affection expected and not any financial assistance is to be noted.
ReplyDeleteThanks, particularly for noticing this and commenting on it!
DeleteParental love is one way. This is nature's design. The offspring can repay it only by showering such love on THEIR children. The parental love can never be paid back!
ReplyDeleteReally , lucky are the ones whose children are affectionate to them
ReplyDeleteYou bet!
DeleteArpudham
ReplyDeleteNPA - No Parental Affection
ReplyDeleteNice expansion for NPA. you should read my earlier poem on Judge Karnan where I have given many different expansions for SC. see http://kanithottam.blogspot.in/2017/05/swaminathan-chinnasamy-karnan-supreme.html
DeleteDr.Alarmelu Rishi 6th march 2018
DeleteI belong to the lucky side of the statement. My children and grand children are affectionate and care for me.