திருவிளையாடல் பாடல் -6
அன்புடன்
ரமேஷ்
வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)
முனிவரும் தேவர்களும் அன்னை மணக்கோலம் கண்டு களித்தபின்னர்
இனிதாய் விருந்துண்ணும் முன்னமே கண்குளிர நாதனின் நடம்காணவே
விரும்பி வேண்டிடவே வெள்ளியம் பலமீதில் நந்திமத் தளமடிக்க
திருமால் இடக்கையிட தேவரும் பூச்சொரிய பரமனும் நடமாடினான்.
இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி
பாடற்பொருள் :
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், திருவிளையாடல் புராணக் கதைப் பாடல்களைத் தொடர்கின்றேன்.
இந்த ஆறாவது பாடல் , மீனாட்சியை மனம் புரிந்த பிறகு, சிவபெருமான் அங்கு வெள்ளி அம்பலத்தில் திருக் கூத்தாடிய திருவிளையாடலைப் பற்றியது.
ரமேஷ்
வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)
முனிவரும் தேவர்களும் அன்னை மணக்கோலம் கண்டு களித்தபின்னர்
இனிதாய் விருந்துண்ணும் முன்னமே கண்குளிர நாதனின் நடம்காணவே
விரும்பி வேண்டிடவே வெள்ளியம் பலமீதில் நந்திமத் தளமடிக்க
திருமால் இடக்கையிட தேவரும் பூச்சொரிய பரமனும் நடமாடினான்.
இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி
பாடற்பொருள் :
மீனாட்சி சிவபெருமானை மணந்த திருக்கோலத்தை கண்டு மகிழ்ந்த முனிவர்களும் , தேவர்களும் , மணவிருந்துண்ணச் செல்லுமுன்பாக , சிவபெருமானின் நடனத்தைக் காண விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் , நந்தி தேவர் மத்தளம் இசைக்க , விஷ்ணு இடுகையை ஒலிக்க வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடினார் . அச்சமயம் தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
Story in Tamil
மீனாட்சி திருக்கல்யாணத்தைக் கண்டு மகிழ்ந்த முனிவர்கழும் மற்றோரும் , அதன் பின்பு, பொற்றாமரைக் குளத்தில் நீராடி பூசைகளை முடித்துக்கொண்டு வந்தனர். அவர்களை விருந்துண்ண அழைக்கும்போது , பதஞ்சலி முனிவரும் , வ்யாக்ரபாதரும் இறைவனிடம் , தில்லையம்பலத்தில் அவர் ஆடிய திருக்கூத்தை , கூடியுள்ள அனைவரும் கண்டு கழிக்கும் வண்ணம் மீண்டும் மதுரையம்பதியில் ஆடிக்காட்டவேண்டுமென்றும், அதன்பின்னரே முனிவர்கள் உணவு உண்ணல் தகும் என்றும் கூறினார். அதற்கிசைந்த சிவனும், அங்கு ஒரு வெள்ளியாலான ஒரு அம்பலத்தை அமைத்து , சிவகணங்கள் வாத்தியங்களை முழக்க, நாரதர் இசை பாட , நந்தி மத்தளம் இசைக்க, திருமால் இடக்கை அடிக்க, தேவ்ராகள் பூச்சொரிய, மீனாட்சியை நோக்கி முறுவல் புரிந்தவண்ணம் , வலது காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி திருநடனம் ஆடினார். அது கண்டு மகிழ்ந்த முனிவர்கள் " இத்திரு நடனத்தைக் காணும் பேறுபெற்ற அனைவரும், மீண்டும் பிறவாது சிவபதவியை அடையவேண்டும் " என்று வேண்ட , சிவனும் அவ்வாறே அருளினார் .
Story in English
The sages and others , after witnessing the Grand marriage ceremony of Meenakshi with Sundareswarar, took a holy dip in the Golden Lotus pond in the temple, finished their prayers and returned. They were invited to partake the feast. At that time, Sage Pathanjali and Vyaagrabathar , prayed to the Lord , to perform the Cosmic Dance which he had performed at the Golden Hall at Chidambaram and only after witnessing that, they would be able to enjoy the feast. The Lord consented and and materialised a Silver Hall at he place. The Lord danced, to the accompaniment of various instruments played by the SivaGanas , Narada's song, Nandhis drum and Vishnu's uddukkai , planting his right foot down and lifting his left feet, glancing at his consort and sporting a smile. The Devas , who were witnessing this dance, showered flowers on him. The sages , who were fortunate enough to witness the Lord's dance, requested Him that all those who witnessed His dance at the Silver Hall should be blessed with a boon which would enable them to reach His abode at the end of this birth, without suffering any more births. The Lord granted them the boon.
ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் , shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Dear Ramesh, Thank you. Through your "Kavidai" I came to know one more thiruvilaiyadal of Sivaperuman. Rammohan
ReplyDelete