Search This Blog

Nov 10, 2017

நீங்கள் எந்த விதம்?

நீங்கள் எந்த விதம்?




சோதனைகளே இல்லாத வாழ்க்கையே கிடையாது.
எல்லோருக்கும் சோதனைகள் வரும்.
வரும் சோதனைகளை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் விதங்கள் மாறுபடும்.
எந்த விதம் சிறந்தது?
நீங்கள் எந்த விதம்?
படித்துப் பாருங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 



நீங்கள் எந்த விதம்?

ஜாதகக்    கட்டுடனே   ஜோதிடரைத்   தேடிப்போய்   
பாதகமாய்ப் போயிருக்கும்  கோளிருப்புக் கட்டங்களை 
சோதித்து அவர்சொல்லும் பாவபரி காரங்களை 
மீதியே  வைக்காமல் செய்பவரும் ஒருரகத்தார். 

போனபல பிறவிகளின்  பாவபுண்யக்  கணக்காலே 
ஆனதிந்த நிலையென்று ஊழ்வினையை   நொந்துகொண்டும் 
நான்முகத்தான் நம்தலையில் எழுதிவைத்த தேயிதென்றும் 
ஏன்என்று கேட்காமல் ஏற்பவர்கள் ஒருரகத்தார்.

என்னதுயர் வந்தாலும் எதிர்க்கின்ற  மனத்துணிவும் 
இன்னலினால்  எந்நாளும் மனமுடைந்து போகாமல் 
என்திறனை வெளிக்கொணர வாய்ப்பிதென்ற மனத்தெளிவும்  
கொண்டென்றும்  கலங்காமல்  எதிர்கொள்வோர்  ஒருரகத்தார்.

இந்தமூன்று வழிகளிலே  எந்தவழி நல்லவழி?

மந்திரங்கள் சொல்லுவதால் வந்ததுன்பம் விலகிடுமா?
நொந்துபோய் நிற்பதனால்  வந்ததுயர் நீங்கிடுமா ?   
எந்தநாளும் மந்தமில்லா உந்துதலே முந்திவரும்.

5 comments:

  1. Lovely. Comes from my heart. SUNDER

    ReplyDelete
  2. Thanks, Sundar. Your appreciation is priceless and encourages me.

    ReplyDelete
  3. Excellent summary of people's attitude 👍👏

    ReplyDelete
  4. பரிகாரங்கள் மனச் சாந்திக்குதான். உந்துவதுதான் ஒரே வழி. உறுதியாகச் சொன்னதற்கு நன்றி.
    துன்பங்களைக் கண்டு துவளாமல் அவைற்றை ஏற்றுக் கொண்டு முன்னேறுவதுதான் நல்வழி.

    ReplyDelete
  5. மிக நன்றாக இருக்கிறது

    ReplyDelete