Search This Blog

Nov 2, 2017

சிந்தித்துச் செயல்படுவோம்

சிந்தித்துச்  செயல்படுவோம் 

கடைக்குப் போய்  காய்கறி  வாங்குவது போன்ற சிறிய காரியங்கள் ஆகட்டும், அல்லது வேறு எந்த முக்கியமான செயலாக இருந்தாலும் சிந்தித்து ஆராயாமல்  செய்யும் எந்த காரியமும் சிறப்பதில்லை .

அன்புடன்
ரமேஷ்

தேங்காயை வாங்குமுன்னே   தட்டிப்  பாக்கணும்
மாங்காயை வாங்குமுன்னே  முகர்ந்து பாக்கணும் 
தங்கத்தை வாங்குமுன்னே  உரைச்சு பாக்கணும்
வெங்காயம் மேல்தோலை உரிச்சுப் பாக்கணும்.              
வெண்டைக்காய் இளசாக வாங்கும் போது
கண்டிப்பாய் அடிமுனையை  உடைச்சுப் பாக்கணும்
மண்பானை பாத்திரங்கள் வாங்கும் போது
சுண்டிப்பாத்து சத்தத்தைக் கேட்டு பாக்கணும்.


               சந்தையிலே குவிகின்ற  பொருளை  யெல்லாம்
               மந்தையாகச்  சென்றுவாங்கும் மனிதர் போலன்றி            
               எந்தவொரு  பொருளையும்நீ வாங்கும் முன்னாலே
               சந்தேகம் தீரும்வரை சோதித்துப்  பார்.

.
நண்பனாக ஒருவனைநீ   ஏற்கும் முன்னே
நல்லவனா கெட்டவனா என்று தெளியணும் .
சண்டைக்கு போகுமுன்னே சேனை பலங்கள் 
உண்டாவுன்   பின்னேயென  எண்ணிப் பாக்கணும்.
வாயைவிட்டு வார்த்தைகளை வீசும் முன்னே
நியாயமதில் உண்டாவென நினைச்சுப்  பாக்கணும்.
தக்க நேரம் வரும்வரையில் காத்துக் கொத்தும்
கொக்குபோல  காத்திருந்து செயல்பட வேணும் .

                அவசரமாய் காரியங்கள் செய்யப் போனால்
                தவறுதலாய் போய்ப்பின்நீ  வருந்த நேரிடும்.
                எந்தவொரு காரியமும் செய்யும் முன்னே
                சிந்தித்துச்  செயல்பட்டால் சிறப்பாய் முடியும்.


































1 comment: