Search This Blog

Nov 4, 2017

ப்ரணவமும் பிரம்மமும்

ப்ரணவமும் பிரம்மமும் . 


ஓம் என்னும் பிரணவ ஒலி  அ ,உ , ம என்ற மூன்று எழுத்துக்களின் இணைப்பாகும்.
அ என்னும் எழுத்து,  முதலாவது- படைப்பது என்பதைக் குறிக்கும்.  
உ என்பது இடைப்பட்டது- வாழ்வது என்பதைக் குறிக்கும். 
ம என்பது  கடைப்பட்டது- அழிவு என்பதைக் குறிக்கும். 
இந்தப்  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்யும் தெய்வங்கள் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர். 
அ , உ , ம  என்ற மூன்று எழுத்துக்களின் இணைப்பே ஓம் எனும் பிரணவம்.
இவ்வொலிகள் குறிக்கும் முத்தொழில்களின் முனைவர்கள்  மூவருமே  அனைத்திற்கும் மூலக்  கருப்பொருளான   ப்ரம்மத்தின் உருவங்களே ! 
இதைப்பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


ப்ரணவமும் பிரம்மமும் 

அசையும் பொருள்கள் அனைத்திற்கும்  

உயிரைத்  தருபவன்   பிரம்மாவே 
"அ"வெ னும் முதலுயி ரெழுத்ததனால் 
அவனைக் குறிக்கும் என்றுணர்க 

உலகில்  உள்ளோர் அனைவரையும் 

உய்த்துக்* காப்பவன் திருமாலே              உய்த்தல் = நடத்துதல் 
"உ"வெனும் உகர உயிரெழுத்து 
அவனைக் குறிக்கும் என்போமே 

முகத்தின் மூன்றாம் கண்ணாலே 

மாசுகள் அனைத்தையும் எரிப்பதனால் 
 "ம"வெனும்  மகர மெய்யெழுத்து   
மகேசன் சிவனைக் குறித்திடுமே.

அகர உகர மகரங்கள்-அவை 

ஒன்றிணைந் தொலிக்கையில் ஓம்ஆகி 
நிகரொன் றில்லாப்  பிரணவத்தின்  
பகுதிக ளாகும் - அதுபோல 

படைத்தல் காத்தல் அழித்தல் எனும் 

முடிவில்*  முத்தொழில் செய்துவரும்         *முடிவு இல்லா 
கடவுளர் மூவரும் பிரம்மமெனும் 
கருப்பொருள் உருவே என்றறிவோம்.





Some additional information :
The Mandukya Upanishad (MU), in particular, is fully devoted to the discussion of OM. In the Upanishads, OM is mentioned as being the same as Brahman (the supreme consciousness)
The  Mandukya Upanishad enumerates fourfold etymological roots of the syllable "Aum". 

It states that the first element of "Aum" is A, which is from Apti(obtaining, reaching) or from Adimatva (being first).[74] The second element is U, which is from Utkarsa (exaltation) or from Ubhayatva (intermediateness).[75] The third element is M, from Miti (erecting, constructing) or from Mi Minati, or apīti (annihilation).[74] The fourth is without an element, without development, beyond the expanse of universe. 
In this way, states the Upanishad, the syllable Om is indeed the Atman (the self).[74][75]


2 comments: