கன்னத்தைக் கிழித்த கால்வாய்கள்
மேகங்கள் முகட்டில் முட்டி
மழைபெய்து நதியாய் மாறி
வேகமாய் பெருக் கெடுத்து
மலைச்சரிவின் மேனியில் ஓடி
அருவியாய்க் கொட்டும் போது
அரித்தெடுத்த கணவாய் போல
மனமெனும் முகட்டில் சோக
மேகங்கள் முட்டி மோதி
கண்ணீராய் மாறிப் பின்னே
கண்களில் குளமாய் நிரம்பி
கன்னத்தில் வழிந்து கால்வாய்ச்
சின்னங்கள் பதித்த முகமோ?
ரமேஷ்
"சோக மேகங்கள்" என்பதற்குப் பதிலாக "நாத மேளங்கள்" என்றாலும், ஆனந்தக் கண்ணீரையும், அனுபவித்து வயதான நிலையையும் குறிக்கும். Why tragedy, why not comedy?
ReplyDeleteAren't they sides of the same coin?
DeleteSeriously, I think people weep more when tragedy strikes them rather than happiness embraces them!
அபுள்ள ரமேஷ்
ReplyDeleteகன்னத்தை கிழித்த கால்வாய்கலின் உரிமையாளர்
காஷ்மீரத்தை சேர்ந்த பெரியவரோ?
ராம்மோகன்
Earlier I had the picture of an old lady but the sadness in this was overwhelming! He certainly seems to be from the North - Kashmir or even Afghanisthan.
ReplyDeleteSuper
ReplyDelete