Search This Blog

Nov 15, 2017

திருவிளையாடல் பாடல்கள் - 1

திருவிளையாடல் பாடல்கள் - 1

இந்தப் பிரதோஷத்திலுருந்து தொடங்கி, திருவிளையாடல் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் சிலவற்றை, 
எனது  சிறிய நான்கு வரிக் கவிதைகளின்  வடிவில் , அவைகளின் ஆங்கில, தமிழ் விளக்கங்களுடன் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மூலக்  கருத்தும், ஆங்கில விளக்கங்களும், படங்களும் shaivam.org இணையத்தளத்திலுருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டுள்ளன.

படிக்கும் அனைவருக்கும் இறையருள் கிட்டுவதாகுக.

அன்புடன்

ரமேஷ்

1. இந்திரன் பழி தீர்த்த படலம்


( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)

பிருஹஸ்பதி தேவ குருவைப்  புறக்கணித்த  பாவத்  தாலும் 
அருந்தவ அந்தண ரிருவரை  அழித்தவூழ் சூழ்ந்த தாலும்
முடியினை இழந்த  இந்திரன்  மதுரைமா நகர மருங்கில்    
கடம்ப வனத்துறை  இறையை பணிந்துதன் பாவம் தீர்ந்தான்.

பிருஹஸ்பதி தேவ குருவைப்  புறக்கணித்த  பாவத்  தாலும் 
அருந்தவ அந்தண ரிருவரை  அழித்தவூழ் சூழ்ந்த தாலும்
வருந்திய  இந்திரன்  கடம்ப வனத்துறை இறையை வணங்கித்  
திரும்பத்தான்  இழந்த முடியைப்  பெற்றானே  பரமனின் அருளால்.       




                                                            (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பாடற்பொருள் :


ஒரு முறை தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி தன் அவைக்கு வருகையில் அவரைக் கவனிக்காது இருந்ததால் இந்திரன் அவரது கோபத்திற்கு உள்ளானான். அந்தப் பாவத்தாலும், வேறோர் சமயம், இரண்டு அந்தணர்களுடைய மரணத்துக்கு காரணமாகி, அவனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்ததாலும் அவன் தன்  பதவியை இழக்க நேர்ந்தது. இப்பாவங்கள் விலக  கடம்பவனத்தில் குடிகொண்ட ஈசனை வணங்கி,  இந்திரன் விமோசனம் பெற்றான்.



The story in English :

Brahaspathi was the teacher of the Devas. Once when he visited the abode of Indran, the King of the Devas, he was not given the respect due to him by Indran who was engrossed in the dance being performed by his courtesans. Angered by this, Brahaspathi refused to be the teacher  of  Devas anymore.. His replacement was one who was born out of a wedlock between a  a Brahmin and a Rakshasa,  The new teacher had a soft corner for the Rakshasas and was secretly helping them in their fight against the Devas. When Indran came to know of it, he killed him. Subsequently , when he had to fight against another powerful demon, in order to defeat him, he had to fashion a powerful weapon called Vajraayutham, using the shoulder bone of a saint named Thathichi. Thus he became the cause for his death. Having killed two learned men, he suffered from the curse of Brahmahaththi  and lost his position as the King of the Devas. Listening to the counsel of Sage Agasthya and others, he came down to earth and visited several holy places to get absolved of the curse . Finallu , he came to Madurai and after worshipping the Lord Siva in the form of Lingam at Kadambavanam near Madurai, he attained salvation.  

The Story in Tamil

இந்திரலோகத்து மாதர்களின் நடனத்தை ரசிப்பதில் மூழ்கியிருந்த இந்திரன், தேவகுரு ப்ரஹஸ்பதியின் வருகையைக் கவனிக்கத் தவறியதால் கோபமுற்ற பிரஹஸ்பதி, அவனைப் புறக்கணித்துச் சென்று விட்டார். குருவின் கோபத்திற்கு உள்ளான இந்திரன், அந்தண-ராட்சக்  கலப்பில் பிறந்த ஒருவரை தேவகுருவாகக் கொண்டு யாகங்களை செய்யும் நேரத்தில், அவர் அசுரர்களுக்கு உதவ எண்ணுவதை அறிந்து அவரைக் கொன்றான். பின்பு, வேறு ஒரு அசுரனுடன்  போர் செய்து அவனை வெல்வதற்காக, தாதிச்சி என்னும் மஹரிஷியின் தோல் எலும்பிலிருந்து செய்த ஆயுதத்தை அவரிடமிருந்து வேண்டிப் பெற்று அவருடைய மரணத்திற்கும் காரணமானான். இந்த இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததால் , ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்கு உள்ளாகி, தேவலோகத்தை ஆளும் தகுதியை இழந்தான்..பின்பு அகத்தியர் மற்றும் பல முனிவர்களின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றும், புண்ணிய நதிகளில் நீராடியும் அப்பாவத்தைப்  போக்கிக்கொள்ள முனைந்தான். கடைசியாக மதுரை நகரின் அருகில் ஒரு கடம்பமரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்குப்  பூஜை செய்கையில் அப்பாவம் விடுபட்டு மீண்டும் இந்திர லோகத்தின் அரசன் ஆனான். .



மீனாட்சியை மணந்த படலம்.




மலையத் துவசன் பெற்ற மீனாட்சி  யாளின்  மூன்றாம்
முலையினை மறையச் செய்து மங்கையவள் கரத்தைப் பற்றி  
சுந்தர ஈசனாய் மதுரை  யம்புரி  தன்னில் மணந்து
வந்துறைந் தருளு கின்றான் அவன்புகழ் கூறுதல் அரிதாம்.

                                                                            (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
விளக்கம் :
மலையத்வஜ பாண்டியனுக்கும், அவன் மனைவி காஞ்சனமாலைக்கும், பல தவங்கள் புரிந்ததன்  பலனாக , யாகத் தீயிலுருந்து ஒருபெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை வளர்த்து வந்த அரசனும் அரசியும், அவளுக்கு மூன்று முலைகள் இருப்பதைக் கண்டு கவலையுற்றனர். அப்போது அசரீரியாக ஒலித்த குரல் ' இவளை  பெரும் வீர கன்னிகையாக வளருங்கள். அவள்  தன்னுடைய  கணவனைத் தானே கண்டுகொள்வாள். அத்தருணத்தில் , இந்தக் குறை நிவர்த்தி ஆகும் " என்று அருளியது.
மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , அரியணையில் அமர்ந்த அந்தக் கன்னிகை, அணைத்து மன்னர்களையும் போரில் வென்று, பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிபி படையுடன் சென்றால். அவ்வமயம் , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்த நிகழ்வு, மீனாட்சி அவதார படலம், மீனாட்சி திருமணப் படலம் ஆகிய படலங்களில் கூறப்பட்டுள்ளது.

படமும், கருத்தும். sivam.org இணையதளத்தின் திருவிளையாடல் பதிப்பிலுருந்து பெறப்பட்டவை. 

The complete stories in English, as given in Sivam.org

Indrhiran getting absolved of his sins :

Indra the king of celestials was engaged in attending to the dancers of his paradise, when his guru (spiritual preceptor) Brahaspati came to see him; and Indra was so very absorbed in this pastime that he did not pay proper attention to the guru nor rise to salute him. Brahaspati departed in great anger; and in consequence of Indra's indifferent attitude to his guru, he had to lose all his prosperity and before that the sympathy of his guru. Having no longer his former preceptor, Indra took a three-headed giant, (asura) for his preceptor, but inducing him to make a sacrifice (yaga), he learned bitterly that the new guru purposed to destroy the gods and favour his clan. Therefore Indra killed him whereby he incurred the sin of Brahma-hatti (crime of killing a brahman). The father of the giant would not allow this act to go unrevenged. He made a yagam, from which Vridhrasura came forth, whom he ordered to kill Indra immediately: the latter struck the giant, but finding that he could not kill him, hid himself in a lotus flower. He them went to Brahma and enquired why he could not kill the asura; and was told that his weapon had become powerless; but he was directed to a place where an old Brahmin named Tatichi had long been performing penance, and was advised to take his shoulder-bone, which would suffice for the object in view; since it was moulded of a good number of powerful weapons that were entrusted to him. The old Brahmin gladly gave up his life and Indra, taking his shoulder-bone by its aid killed the asura, hereby the Brahmahatti was doubled;  It  was recommended that Indra in order to the removal of his sin, should go down to the earth, visit the sacred places, and bathe in the rivers. This he did, without finding relief till he came to a certain forest of lili (Kadamba) trees, where suddenly he found his burden removed. Being surprised at this, he commanded search to be made around, when a lingam, the emblem of Siva was found under a lili tree, to which he made puja, and so great was his joy that even his speech became confused. As it was a forest, there were no flowers with which to make garlands; but on looking he saw a tank with lotus flowers of which he made garlands and from this use of its flowers the tank obtained the name of Pottamarai or the Golden lotus.

Meenakshi incarnation and her marriage to Lord Sundareswarar.


Malayadhwaja-Pandyan although he had many wives, the chief of them being Kanjana-malai, daughter of the Chola King, yet had no child. To beget  a child he performed ninety-nine aswamedha sacrifices, when Indra, becoming alarmed, (since another sacrifice, would entitle the King to the Indra's throne) appeared to him and said, "Why are you troubling   yourself ? Perform the Puthrakameshti Yagna  before the temple of the God Siva, and you will have your wish granted." While the King was performing this yagna , a female child of three years ,  was born from the flame of the sacrifice.  While bringing up the child it was found that she had three breasts,  which troubled the foster-parents very much. They parayed to God and  the voice of the god was heard from heaven, bidding them give the child the same education as for a man, and adding, that when her appointed husband should come, then one of the breasts would disappear: when she was grown up they had her formally installed on the throne, and then Malaya-Dhwajan died.
 When the above woman, Tadathakai (or Invincible) was ruling,  she went and conquered all the neighbouring Kings. She next conquered Indra, and then proceeded to attack Kailasa when Siva , smiling a little, came out. As soon as he  saw her. her third breast disappeared, and she realised that Shiva was her husband-to-be . The marriage was performed at Madurai.

7 comments:

  1. Dear Ramesh,

    I welcome this fantastic work, as I was born in Madurai.

    One of my hobbies those days was visiting the Meenakshi Amman temple. I always entered from the eastern side, did a pradakshina of Potramarai Kulam, before entering the various sannidhis.

    On the walls surrounding the tank, I had watched all the paintings in original, that you have included here. Watching these now reminds me of those moments that took place nearly 65 years ago. Those paintings got washed off after thoughtless actions during subsequent renovations.

    And there are 64 Thiru Vilaiyadals, a couple involving Manickavasagar, who is not among the 63 Nayanmars. He must have preceded them.

    Good luck!

    Raman S

    ReplyDelete
    Replies
    1. Thank you for your spontaneous encouragement. Hope I am able to sustain this effort.

      Delete
  2. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    வெங்கடேசன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, வெங்கடேசன்!

      Delete
  3. Dear Ramesh,
    Excellent thought. Sure it will be interesting, thought provoking and well worded as usual. I have always been devoted to Lord Siva. My latest work on Thiruvasagam is going to be discussed during our annual friends meet at mahabalipuram on 05.12.2017.
    Regards
    SUNDER

    ReplyDelete
  4. Thank you. Hope I am able to sustain this effort. I will definitely take a lesson from your epic efforts in writing the Sundara Ghandam commentary and translation.!

    ReplyDelete
  5. திரு விளையாடல்கள் மிளிரட்டும் நறுக்குத் தறித்தாற் போல் நான்கு வரிகளில் - நரசிம்மன்

    ReplyDelete