ஒன்று முதல் ஒன்பது வரை
எண்ணிலும் , எழுத்திலும் , எண்ணத்திலும் அடங்காத இறைவனைப் பற்றி , ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை அடக்கிய ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
("தானதான தானதான தானதான தானனா " என்ற மெட்டு )
மூன்றெழுத்து சேர்ந்துவந்த ஓரெழுத்து ஒமுடன்
அஞ்சுஆறு ஏழெழுத்து மந்திரங்கள் சேர்த்திட்டு
நாலுவேளை ஓதினால் நாலுஅய்ந்து கோளையும்
ஆளுபவன் அருளினால் ஈரெட்டும் கிட்டுமே!
மூன்றெழுத்து சேர்ந்துவந்த ஓரெழுத்து-- அ ,உ ,ம என்ற மூன்று எழுத்துக்கள் சேர்ந்து பிறந்த ஓம் என்னும் ஓரெழுத்து
அஞ்சுஆறு ஏழெழுத்து மந்திரங்கள் -- நமசிவாய , சரவணபவ ,
நமோ நாராயணாய என்னும் மந்திரங்கள்
நாலுவேளை -- காலை, மதியம், மாலை, இரவு
நாலுஅய்ந்து கோளையும் ----- ஒன்பது கிரஹங்களையும் ( 4+5=9)
ஈரெட்டும் கிட்டுமே ---- பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க என்ற வாழ்த்தில் அடங்கிய
பதினாறு வகை நலன்களும்
கிடைக்கும். ஈரெட்டு=பதினாறு
ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரங்களை தினமும் நான்கு வேளைகள் ஜபிப்பவருக்கு நலன் அனைத்தும் கிடைக்கும்.

பலருக்கும் தெரிந்த ஒன்றானாலும் சொல்லியிருக்கும் விதம் மிக அருமை.மிக சாதாரண விஷயத்தைக் கூட கவிநயத்தில் சொல்லும்போது வித்தியாசப்படுகிறது .
ReplyDeleteThanks MN.
ReplyDelete