சென்ற வாரம் கும்பகோணம் சென்று ஆலங்குடியில் கோவில் கொண்டிருக்கும் குரு தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்தோம்.
அவரைப் பணிந்து ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
குரு தக்ஷிணாமூர்த்தி
ஆலங் குடிதன்னில் ஆல மரத்தடியில்
---------கோலத் தவமிருக்கும் குருநாதா!
ஆல காலமுண்ட நீல கண்டனின்
----------ஞான உருவான சர்வேசா!
வேதம் நான்கினுட் பொருளை அறியவே
----------பாதம் பணிந்திருக்கும் முனிவருக்கே
ஓதி அவரறிய போதித் தருள்செயும்
----------ஆதி குருவான அகிலேசா!
சின்முத் திரையையும் சுடர்த்தீப் பிழம்பையும்
----------சபமா லைசதுர்வே தங்களையும்
நான்கு கரங்களில் ஏந்திஅருள் செய்து
----------தென்திசை யைநோக்கி அமர்ந்தோனே!
முயலகனின் வடிவில் அறியா மையிருளை
----------காலடி யில்கிடத்தி அழிப்போனே!
செயல்யா வும்சிறக்க மெய்ஞ்ஞா னம்பிறக்க
----------குருவுந் தன்தாளைப் பணிவேனே!
சித்ரம் வடதரோர் மேலே; வ்ருத்தா:சிஷ்யா குருர் யுவா: குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன சம்சயா:
ReplyDelete(தமிழில் கீழே....)
ஆலமரத்தடியில் ஒரு அதிசயம் பாருங்க! இளைஞன் ஆசிரியர், முதியோர் மாணாக்கர். குருவின் விளக்கம் மௌன மொழி, சிதறித்தீர்ந்தன சிஷ்யர் ஐயங்கள்!
சித்ரம் வட தரோர் மூலே ....என்று படிக்கவும். ஆட்டோகரெக்ட் விஷமம்!
ReplyDeleteSuper - it is clear that you have been really blessed with poetic ability
ReplyDeleteJust one suggestion, if you do not mind - the thallakkattu is superb right across except in one line - சபமாலை சதுர் வேதத்தையும் - can you figure out a way to make this sound symmetrical - may be "jabamalaiyodu chathur vedathaiyum" - Regards
First let me thank you for the comments. " ithai, ithaiththaan, naan ethirpaarththen'!
DeleteNow to the poem.
I have set the poem with alternate lines in Alavadi ( for seers) and sindhadi ( three seers.)
"jabamalaiyodu chathur vedathaiyum" - will be read as "jabama laiyodu chathur vedathaiyum". It becomes fore seers in the second line. I could have made it "jabamaa laichathurve thathinaiyum". But a better one i though is this - சபமா லைசதுர்வே தங்களையும். and have changed suitably.
First let me thank you for the comments. " ithai, ithaiththaan, naan ethirpaarththen'!
ReplyDeleteNow to the poem.
I have set the poem with alternate lines in Alavadi ( for seers) and sindhadi ( three seers.)
"jabamalaiyodu chathur vedathaiyum" - will be read as "jabama laiyodu chathur vedathaiyum". It becomes fore seers in the second line. I could have made it "jabamaa laichathurve thathinaiyum". But a better one i though is this - சபமா லைசதுர்வே தங்களையும். and have changed suitably.
Your poem on Dakshinamurthy. Equally fine are the comments by readers and your explanations. God is great to have blessed you with this talent also in life even though this talent is a late entry. Rammohan
ReplyDelete