கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை
நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, பல நாட்கள் கோட்டூர் தோட்டம் நான்காம் தெருவின் வழியாகச் செல்லுவது உண்டு. அப்போதெல்லாம் ஒரு வீதியின் முன்னால், பிள்ளையார் சிலை ஒன்றின் அருகில், சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கரும்பலகையில் (பிள்ளையார் பலகை) எழுதப்பட்டுள்ள கருத்துப் பொதிந்த வாசகங்களை நின்று படித்துச் செல்வேன். ஆனாலும், "தினம் ஒரு கருத்து" என்று தவறாமல் எழுதி வரும் இப்பணியைச் செய்து வருபவர் யார் என்று தெரிந்து கொண்டதில்லை.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால்தான் அவரை சந்திக்கும் வாய்ப்பும், அவரிடமிருந்து இதுவரை அப்பலகையில் இடம் பெற்று இருந்த வாசகங்களின் பதிவைப் பெரும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த மனிதர்தான் ஒய்வு பெற்ற முன்னாள் காவல் துறைத் தலைவர் திரு.ராஜ்மோகன்.
அவர் பணியைப் பாராட்டி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
அவர் பணியைப் பாராட்டி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
கருக்கல் காலையில் கண்விழித்து
----------காலைக் கடன்எல் லாம்முடித்து
சுருக்கென சூரியக் கிரணங்கள்
----------சருமம் துளைக்க எழுமுன்னே
விருவிரு விருவென நடைபோட்டு
----------வீதியில் நடக்கும் வேளையிலே
கருத்துப் பொதிந்த வாசகங்கள்
----------கருப்புப் பலகையொன் றில்காண்பேன்.
கோட்டூர் தோட்டக் கோட்டத்தில்
நீண்ட நான்காம் வீதியிலே
வீட்டெண் பதினேழின் முன்னே
முன்னாள் காவல் துறைத்தலைவர்
கேட்டும் படித்தும் பட்டறிந்தும் - தான்
-----------கண்டுகொண்ட உண்மைகளை - இத்
தோட்டத்தின் மக்கள் பயனுறவே
-----------நாளும் பலகையில் எழுதுகிறார்.
வீதியில் நடக்கும் மாந்தர் எல்லாம்
பாதியில் நடையை நிறுத்திட்டு- நற்
சேதிகள் சொல்லும் பலகையிலே
-----------ராஜ மோகனார் பதித்திட்ட -
நீதி உரைகளைப் படித்துவிட்டு - மிக
---------- நன்று நன்றென நவிலுகிறார்.
மாதிரி மனிதர் இவர்பணிகள் - பல
----------- நாட்கள் தொடர இறையருள்க!
திரு ரமேஷ் அவர்களே
ReplyDeleteகோமகன் ராஜ்மோகனும் வாழ்க வளர்க அவர் திருப்பணி
அதை கவிதை வடிவில் தந்த தாங்களும் வாழ்க வளர்க .
அன்புடன் ராம்மோகன்
கரும்பலகையை நானும் தினம் தினம் காண்பேன்
ReplyDeleteகருத்தினை ரசிப்பேன் அவர் எழுத்தினை ரசிப்பேன்
எழுதியவரிடம் நின்று கதை அளந்தேனே அன்றி அதை
எழுதியவரைப் பற்றி எழுதிய உமக்கு உளமார்ந்த நன்றி.