மனதைத் திறந்தால் மாற்றம்வரும்.
மனதைத் திறந்தால் மாற்றம்வரும்.
கதவு திறந்தால் காற்று வரும்-நெல்
விதைகள் திறந்தால் நாற்றுவரும்
நிலம் திறந்தால் ஊற்று வரும்-நம்
மனம் திறந்தால் மாற்றம்வரும்.
கண்கள் திறந்தால் காட்சி வரும்-வான்
விண்ணும் திறந்தால் மழையும்வரும்.
எண்ணம் திறந்தால் கவிதை வரும்-நம்
மனதைத் திறந்தால் மாற்றம்வரும்.
செவ்வாய் கிரகத்தை சீண்டிப் பார்க்கும்
இன்றய உலகின் நடைமுறைகள் - நமக்
கொவ்வா திவையென உதறித் தள்ளல்
ஒருபோதும் முறை ஆகாதே
நாம் பிறந்த நேற்றைய நாட்களின்
நீதிகள் நியமங்கள் வெவ்வேறு- அதில்
சோம்பி யிருந்து புதிய உலகினை
வேம்பென வெறுத்தல் தவறாகும்.
மாற்றங்கள் நிகழ்கையில் முதலில் மனதின்
வசதி வட்டத்தின்* வெளிஇருக்கும்- அதை *comfort zone
ஏற்றுக் கொண்டால் ஏற்றங்கள் பலவும்
வாழ்வில் தானே கூடி வரும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
இயற்கையின் நியதி இதையுணர்வோம்- நம்
மனதைத் திறந்து மாற்றங்கள் ஏற்று
இன்றைய உலகை அனுபவிப்போம்.
"வர வர காலம் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறது . அந்த நாளிலே இப்படியா இருந்தது? எல்லாம் தலைகீழாய்ப் போச்சு! இந்த ஜெனெரேஷன் குட்டிச்சுவராகப் போய்க்கொண்டு இருக்கு! "
வயதானவர்கள் பேசிக்கொள்ளும்போது தவறாமல் சொல்லப்படும் ஒரு கருத்து இது.
எவ்வளவு தூரம் இது சரி?
நம்முடைய அடுத்த தலைமுறையில் நாம் காணும் மாற்றங்கள் தரத்தில் தாழ்ந்தவை, ஒவ்வாதவை என்றால் , நம் தலைமுறை நம் முன்னோரிடமிருந்து மாறுபட்ட நடைமுறைகளையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறதே, அது மட்டும் சரியா? சரி என்றால் இன்று நடப்பது மட்டும் ஏன் நம்மை உறுத்துகிறது?
மாற்றம் என்றும் மாறாதது என்பதை உணர்ந்து , திறந்த மனதோடு அந்த மாற்றங்களில் நம்மையும் ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வதே சரி!
அதைப் பற்றி-----------
அன்புடன்
ரமேஷ்
கதவு திறந்தால் காற்று வரும்-நெல்
விதைகள் திறந்தால் நாற்றுவரும்
நிலம் திறந்தால் ஊற்று வரும்-நம்
மனம் திறந்தால் மாற்றம்வரும்.
கண்கள் திறந்தால் காட்சி வரும்-வான்
விண்ணும் திறந்தால் மழையும்வரும்.
எண்ணம் திறந்தால் கவிதை வரும்-நம்
மனதைத் திறந்தால் மாற்றம்வரும்.
செவ்வாய் கிரகத்தை சீண்டிப் பார்க்கும்
இன்றய உலகின் நடைமுறைகள் - நமக்
கொவ்வா திவையென உதறித் தள்ளல்
ஒருபோதும் முறை ஆகாதே
நீதிகள் நியமங்கள் வெவ்வேறு- அதில்
சோம்பி யிருந்து புதிய உலகினை
வேம்பென வெறுத்தல் தவறாகும்.
மாற்றங்கள் நிகழ்கையில் முதலில் மனதின்
வசதி வட்டத்தின்* வெளிஇருக்கும்- அதை *comfort zone
ஏற்றுக் கொண்டால் ஏற்றங்கள் பலவும்
வாழ்வில் தானே கூடி வரும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
இயற்கையின் நியதி இதையுணர்வோம்- நம்
மனதைத் திறந்து மாற்றங்கள் ஏற்று
இன்றைய உலகை அனுபவிப்போம்.
Hi Ramesh, I like your poem. The word 'vasadhi vattam' new on me and very apt for what it means.
ReplyDeleteThe last stanza is profound and a great way to to champion 'change' to keep one interested in 'life' as we perceive it day in and out!
Venkateswaran Ramesh, Newcastle
மாற்றம் நிரந்தரம் எல்லோரும் சொல்வது. ஆனால் அதை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது - நரசிம்மன்
ReplyDeleteThanks , Narasimhan.
ReplyDelete