நில்லாத நடம்புரிவோய் , அருள்நீயே!
(பிரதோஷப் பாடல் 1)
(பிரதோஷப் பாடல் 1)
"ஆசைகளும் , உலகப்பற்றுகளும் துன்பங்களுக்கு வித்து " என்பதை பல ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இளம் வயதில் ஆசைகளைத் துறப்பது கடினம்தான்.
ஆனாலும், இளமையில் இன்பங்களை அனுபவித்த பின்பு, வயது முதிர , முதிர ஆசைகளைத் துறப்பது சுலபமாக அல்லவா ஆகவேண்டும்?
இதுவும் அவ்வளவு எளிதாக இல்லையே!
இந்தப் பற்றில்லா நிலைமை வந்தடைய, நடராசப் பெருமானை வேண்டி இன்றைய பிரதோஷப் பாடல் .
அன்புடன்
ரமேஷ்
நில்லாத நடம்புரிவோய் !
துள்ளியே விளையாடும் இளமைப் பருவங்கள்
தள்ளியே ஆண்டுபல போனபின்னும்
பல்லாடி நரைவிழுந்து பார்வையும் புரையோடி
தள்ளாடித் தடியூன்றும் நேரத்திலும்
உள்ளாடும் மனதினில் உலகத்து ஆசைகள்
நில்லாது நீக்கிட்ட நிலை காண
நில்லாது நீக்கிட்ட நிலை காண
சொல்லோடு பொருள்போல உமையோடு இணைந்திட்டு
நில்லாத நடம்புரிவோய் , அருள்நீயே!
நில்லாத நடம்புரிவோய் , அருள்நீயே!
Nice poem on pradosham day!
ReplyDelete