Search This Blog

Feb 7, 2017

எழுதாத டைரி ( The Empty pages of A Diary)

எழுதாத டைரி



கட்டி வைத்திருந்த
கடந்த ஆண்டுகளின்   நாட்குறிப்பேடுகளை
புரட்டிப் பார்க்கிறேன்!

எழுதி நிறைத்த  பக்கங்களை விட
எழுதாத வெற்றுப் பக்கங்களே அதிகம்!

எனது கடந்த வருடங்களின்
வாழ்க்கைப் புத்தகப் பக்கங்களை
மனதில்
புரட்டிப் பார்க்கிறேன்.

அவற்றிலும்

முழுமையாக வாழ்ந்து
நிறைத்த  பக்கங்களை விட
நிறைக்காத வெற்றுப்  பக்கங்களே அதிகம்!

மேசையின் மீது இருக்கும்
இந்த வருட நாட்குறிப்புப் புத்தகத்தின்
இன்னும் எழுதப்படாத ஏடுகள்
காற்றில் சிறகடித்து
என்னை நோக்கி
கண்களைச் சிமிட்டுகின்றன!.

அவைகளையும் ,

வாழ்வின் இந்த வருடப் பக்கங்களையும்

எழுதி நிறைப்பேனா?
எழுதாமல் கழிப்பேனா?


ரமேஷ் ( கனித்தோட்டம் )
www.kanithottam.blogspot.com

ஆங்கில மொழி பெயர்ப்புக்கு கீழ்கண்ட பதிவைப் பார்க்கவும்.
http://kanithottam.blogspot.in/2017/02/unwritten-diary-english-version.html

2 comments:

  1. So true Ramesh. I am sure all of us have experienced the same. I now use old diaries for maintaining my farm accounts and Jaya for saving her songs.

    ReplyDelete
  2. பள்ளிக்கூட நாட்கள்முதலே உன் நண்பன் என்பதாலும் , உன் எண்ணங்களின் ஓட்டத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பவன் என்பதாலும் என்னால் இதை கூற முடியும் . உனது நாட்குறிப்பு புத்தகத்திலும் சரி உனது வாழ்க்கை குறுப்பிலும் சரி எழுதப்பட்ட ஏடுகளின் எண்ணிக்கை உன் கணித்தபடி குறைவாக இருப்பினும் அதன் உயிரோட்டம் மிகவும் உயர்வாகவே இருக்கும் .

    ReplyDelete