ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 11
இந்தச் செய்யுளின் பாடல் விளக்கம் சற்று விரிவாக உள்ளது. இதை படிக்குமுன் சென்ற பதிவில் கூறப்பட்ட 9,10 செய்யுள்களை மீண்டும் படித்து, அவற்றுடன் சேர்த்து புரிந்து கொள்ளுதல் நல்லது.
இதற்கு வசதியாக, அந்த இணைப்பின் தொடர்பையும் (links) இந்தப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்.
ஈசாவாஸ்ய உப்பனிஷத் - செய்யுள் 11
மொழிபெயர்ப்பு : *
பெயர் புகழ் கருத்தினில் கொள்ளாமல்
விளைவெதை யுமெதிர் பாராமல்
உயரிய நோக்குடன் இணைத்தினிதாய்
தவஜப தானங்கள் செய்வதினால்
வினைப்பயன் விலக்கி மரணமெனும்
முடியாக் கடலையும் கடந்திடுவார்.
மனமும் தூய்மை பெற்றுப்பின்
தியானம் செய்யத் தகுதி பெரும்.
தூய்மை துலங்கும் மனத்தினையே
ஒருங்கே ஒருநிலைப் படித்துப்பின்
தியானம் செய்வதின் விளைவாக
அமரத் துவத்தை அடைந்திடுவார்!
இவ்வகை இருவழிச் சாதனைகள்
ஒன்றோ டொன்று இணைந்ததுவே!
செவ்வனே இவற்றைச் செய்பவரே
இறைநிலை தனையே அடைவாரே .
ஒன்றை விலக்கி வேறொன்றை
மட்டும் செய்தால் பயனில்லை
என்றே உரைத்தனர் சான்றோரே !
நன்றாய் அதனை உணர்ந்திடுவோம் .
The link for slokas 9 and 10 -
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books

செயல்கள்,தியானம், இரண்டையும் சேர்த்து எவன் அறிகிறானோ , அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து, தியானத்தால் இறைவா நிலையை அடைகிறான்.
விளக்கம் *
செயல்கள் தவிர்க்க முடியாதவை. பற்றின்றி செய்யப்படும் செயல்கள் , கடந்த பிறவிகளின் வினைப் பலன்களை அழித்து , பிறப்பை அறுக்கின்றன . மரணத்தைக் கடந்து என்று கூறப்பட்டு இருப்பது , வினைப்பயனிலிருந்து விடுபடுவது என்பது. முழுதும் விடுபட்டால் , அதன்பின் பிறப்பு இல்லை; அதனால் மரணமும் இல்லை. இதற்கு அடுத்த நிலை தியானத்தின் மூலம் அமரத்துவத்தை அடைவது.
English Translation **
But those who combine action with meditation,
Cross the sea of death through action
And enter into immortality
Through the practice of medidation.
So have we heard from the wise.
பாடல் :
பெயர் புகழ் கருத்தினில் கொள்ளாமல்
விளைவெதை யுமெதிர் பாராமல்
உயரிய நோக்குடன் இணைத்தினிதாய்
தவஜப தானங்கள் செய்வதினால்
வினைப்பயன் விலக்கி மரணமெனும்
முடியாக் கடலையும் கடந்திடுவார்.
மனமும் தூய்மை பெற்றுப்பின்
தியானம் செய்யத் தகுதி பெரும்.
தூய்மை துலங்கும் மனத்தினையே
ஒருங்கே ஒருநிலைப் படித்துப்பின்
தியானம் செய்வதின் விளைவாக
அமரத் துவத்தை அடைந்திடுவார்!
இவ்வகை இருவழிச் சாதனைகள்
ஒன்றோ டொன்று இணைந்ததுவே!
செவ்வனே இவற்றைச் செய்பவரே
இறைநிலை தனையே அடைவாரே .
ஒன்றை விலக்கி வேறொன்றை
மட்டும் செய்தால் பயனில்லை
என்றே உரைத்தனர் சான்றோரே !
நன்றாய் அதனை உணர்ந்திடுவோம் .
The link for slokas 9 and 10 -
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books
No comments:
Post a Comment