Search This Blog

Nov 20, 2016

இலையுதிர் காலம் - with english translation

இலையுதிர் காலம்

இப்போது அமெரிக்காவில் இலையுதிர் காலம்.
எல்லா மரங்களின் இலைகளும் முதலில் நிறம் மாறுகின்றன.
பச்சைப் பசேல் என்று கரும் பச்சைப்  போர்வை போர்த்தியிருந்த மரங்களும், மரங்கள் அடர்ந்த மலைச் சரிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகின்றன.
முதலில் கரும் பச்சை வெளிர் பச்சை ஆகி, பின்னர் மஞ்சள், சிவப்பு, ஊதா என்று ஒரு வண்ணக் கலவையாகவே மாறுகிறது. இது நடப்பது ஒரு சில நாட்களுக்கு உள்ளேயே!
இதனோடு கூடவே இலைகள் உதிரத்  துவங்குகின்றன.
உதிர்ந்தபின் பொட்டிழந்த நெற்றிபோல் களையிழந்து காணும் இந்த மரங்களும் , சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பூத்துக் குலுங்கத் தொடங்கும்!
இந்தச் சுழற்சி நமக்கு கற்பிக்கும் வாழ்க்கைப் பாடம் பற்றி ஒரு பாடல்.
அன்புடன் 
ரமேஷ்.
பி.கு: ஒரு புதிய முயற்சியாக, இந்தப் பாடலின் ( ஒரு சுமாரான) ஆங்கில மொழிபெயர்ப்பையம் சேர்த்திருக்கிறேன்- மரபுக்கவிதை நடையில் எழுதும் கவிதைகளின் அர்த்தங்கள் புரிவதில்லை என்று என்னிடம் கருத்துத் தெரிவித்த ஒரு சிலருக்காக மட்டும்!



 
நிறம் மாறும் பருவம்

ஆடிமுடிந்து ஆடிஅசைந்து அடுத்தமாதம் வருகையில்
கோடைமுடிந்து அடுத்துவேனில் பருவமுமே  தொடங்கையில்*
மூடிஉடலை முழுதும்மறைக்கும் பச்சைநிறத்  தாவணி-யதில்
கோடிவேறு நிறங்கள்பலவும் படரத்தொடங்கும் ஆவணி.
        *தொடங்குகையில்
When August ( tamil month Aani ) fades away slowly, and ushers in September (tamil month Avani) and with it , the fall season ,  the green coloured half-sari ( thavani) covering the trees , start sporting several colours.

காதலனாம்  ஆதவனின் கதிர்க்கரங்களின்  தழுவலும்
பாதியாகிப் போனதனால்  துயர்அடைந்த மரங்கள்தம்
பச்சையாடை நடுவில்பல வண்ணங்களைத் தெளித்தவன்* 
இச்சையினைத் தூண்டிடவே முயற்சிகளும் செய்யுதோ?
        * தெளித்து அவன் 
With fall replacing summer and with days shortening, have the the trees started  missing the embrace of the  rays of their Love, the Sun? Have they started  sporting several colours now, in an effort to to entice him back?


இலை உதிரும் பருவம் 

மரம்விடுத்து மிதந்துவிழும் வண்ணவண்ண  இலைகளே 
மனம்விடுத்து மிதந்துசெல்லும் எண்ணஅலைகள் போலவோ?
எண்ணஅலைகள் எழுதும்கவிதைக்  கருப்பொருளாய் ஆகும்போல்
மண்விழுந்த இலைகளுமே நல்லுரமாய் மாறுமே !



Just like the myriad thoughts nestling in the poet's mind that float away and become the source and nourishment for a poem , the leaves  leaving the branches and  floating in the wind , fall down and get converted as fertiliser  and nourish the tree from which they have fallen !


கடந்துபோன   கோடைகாலக்  கதிரவனின் கிரணங்களால்
சூடுபட்ட உடலின்வெப்பம் சற்றுக்குறைய வேண்டியே
ஆடையான இலைகளைந்து  அத்தனை  மரங்களும்
வாடைக்கால வருகைக்காக விழிகள்நோக்கி  நிற்குதோ?  

Have the  trees  suffered due to the heat of the summer ? It does appear as if  the trees  are shedding their leafy clothes now  in order to cool their overheated bodies  and, having done so, are waiting eagerly for the cooler climes of the winter to set in!



நாளை ?

நேற்றுமாலை இலைகள்நிறைந்த கூந்தல்இருந்த  மரங்களே
முற்றும்இன்று ஓரிரவில் மொத்தமுடியும் இழந்ததே!
இன்றுமனிதன் அனுபவிக்கும் இன்பம்செல்வம் அனைத்துமே
நின்றுஎன்றும் நிலைப்பதல்ல என்றஉண்மை உணர்த்துதோ?

Yesterday the trees were full of leaves. Overnight they are gone and the Tree is bald! Are the trees trying to tell us that neither the wealth nor the happiness one gets from it are permanent and can disappear overnight ? 

இலையைஇழந்து கிளைகள்வெறித்துக் காத்துநிற்கும் மரங்களும்
நாளைவசந்த வேளைவந்தால் மீண்டும்பூத்துக் குலுங்குமே !
நிலையும்இன்று குலைந்துபோன மனிதர்பலரின்  வாழ்வுமே
மலர்ந்துமீண்டும் மகிழ்ச்சிகூடும் ; இதுவும்வாழ்க்கைப் பாடமே! 

The trees which are completely barren now, will start to bloom again, when spring comes. Similarly  those who are suffering now, can certainly look forward to a brighter tomorrow with hope!





2 comments:

  1. Lost in translation?- ஆனிக்கும் ஆவணிக்கும் நடுவில் ஆடி ஆடி உதிர்ந்து விழுந்ததோ?

    ReplyDelete
  2. Good one...a beautiful blend of nature's routine equated romantically and teaching the life cycle!!

    ReplyDelete