Search This Blog

Nov 16, 2016

கறுப்புப் பணம்


கறுப்புப் பணம்

கறுப்புப் பண வீக்கத்தைத் தவிர்க்க அரசு எடுத்த திடீர் நடவடிக்கை பலரை நிலை குலையச் செய்து இருக்கிறது. முக்கியமாக எதிர்க் கட்சிகளை. அரசு எது செய்தாலும் அதை எதிர்ப்பதே கடமை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இக் கட்சிகள், திருடனைத் தேள் கொட்டியது போல் , இதை முழுதுமாக எதிர்க்க முடியாமல், அமுல் படுத்துவத்திலுள்ள குறைபாடுகளை பற்றி அலறுகின்றன. எப்போதுமே அரசுக்கு எதிராகச் செயல்படும் ஆங்கில ஊடகங்களும் தங்கள் பங்குக்கு குறைகளை மட்டுமே படம் போட்டுக் காட்டுகின்றன. இரண்டாம் உலகப் போரின் பொது, இங்கிலாந்தில் உணவுக்கு கட்டுப்பாடு கொண்டுவந்த நேரத்தில், மக்கள் வரிசையாக நின்று தங்களிடம் இருந்த அதிகப் படியான உணவுப் பொருள்களை அரசுக் களஞ்சியத்தில் சேர்த்தார்கள் என்று படித்ததாக நினைவு! இப்படி நாம் செய்யாவிட்டாலும், நாம் இந்த நேரத்தில்  சற்றுப் பொறுமையைக் காத்து அரசுக்கு தோள்  கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதே இவ் வெண்பாக்கள்..

அன்புடன் 

ரமேஷ்

 
கறுப்புப் பணம்

தீய வழிகளில்  சேர்த்துப் பதுக்கிட்டோர் 
ஆயிரமும்  ஐந்நூறும்  செல்லாமற் போனவுடன் 
வாயில்  வயிற்றில்  அடித்துப் பதைபதைத்து 
நோய்பட்டுக்    காயமுற் றார்.

கோடிமேல்  கோடியாய்ப் செல்வம்  பதுக்குவோர்
ஆடியே  போயினார்  இன்னேரம் - மோடியின்
தாக்குதலைத் தாளாமல் ரூபாய் பணநோட்டை 
தீக்கிரை ஆக்குறார் இன்று

சரியாக நேர்வழியில் சேமித்த பேர்கள்
வரிசையாய் நிற்கிறார் வங்கிகளின் முன்னால் .
முறைமீறி செல்வத்தை  சேர்த்திட்ட பேரோ
குறைசொல்லிக்  கூவுறார்  இங்கு

ஆரம்ப சங்கடங்கள் சிக்கல்  இருந்தாலும்
வாரத்தி லேயவையும்    போய்விடும்   - பாரத
நாட்டின் நலன்கருதி  நாமும்  பொறுமையைக்  
காட்டிக்    கொடுத்திடுவோம்  தோள்.



2 comments:

  1. If possible we can visit banks and help people with filling forms and any other sort of help possible

    ReplyDelete