குறள் மேல்வைப்பு வெண்பா -13
துரியோதனன்- கர்ணன் - இவ்விருவரிடையே இருந்த நட்பு அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக இந்த நட்புறவைப் பற்றிப் பற்றி பேசுகையில், "துரியோதனன் செய்கையில் கர்ணனுக்கு முழு உடன்பாடு இல்லையென்றாலும், எவ்வாறு நட்பின் காரணமாக அவன் துரியனுக்குத் துணை நின்றான் " என்பது பேசப்படுகிறது. ஆனால் துரியோதனன் கர்ணனிடம் வைத்திருந்த நட்பையும் , அதனால் அவன் மேல் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று உண்டு.
ஒரு சமயம், கர்ணன் துரியோதனனின் மனைவி பானுமதியுடன் துரியோதனனுடைய மாளிகையில் , தாயம் விளையாடிக்கொண்டிருந்தான். ஆட்டத்தில் தோல்வியைத் தழுவ இருந்த பானுமதி, " போதும் இந்த ஆட்டம்" என்று கூறி எழுந்து செல்ல முயல்கையில், கர்ணன் அவள் மேகலையைப் பிடித்து இழுத்து அவளைத் தடுக்க முயன்றான். மேகலையில் பதித்திருந்த மணிகள் சிதறி அறையெங்கும் தெறித்து ஓடின! அவ்வமயம் அங்கு வந்த துரியோதனன் , இதனைக் கண்டும் , கர்ணனின் செயலைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் , " சிதறிய முத்துக்களை எடுக்கவோ ? கோக்கவோ? " என வினவுகிறான்.
இச்செயல் வள்ளுவரின் இந்தக் குறளுக்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
(குறள் - 803 , அதிகாரம் - பழைமை )
நண்பர் நட்பின் உரிமையால் செய்யும் செயலைத் தான் செய்தது போலவே எண்ணி உடன்படாவிட்டால், அவரோடு தான் பழகிய நட்பு என்ன பயனைத் தரும்?
இக்குறளை ஈற்றடிகளாகக் கொண்ட ஒரு குறள் மேல் வைப்பு வெண்போ இதோ.
அன்புடன்
ரமேஷ்
துடுக்குடன் மேகலையை கர்ணன் இழுக்க
எடுக்கவோ கோக்கவோ என்றான் துரியன்
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
English version by Rev.Pope
When to familiar acts men kind response refuse
What fruit from ancient friendship's use?
English version by Suthaananda Bharathi
Of Long friendship, what is the use
Righteous freedom if men refuse?
Meaning By Rev. Pope
Of what avail is longstanding friendship, if friends do not admit their as their own actions ( actions done by their friends ) through the right of intimacy?
Good one Ramesh as usual. Do you pick the event and match it with Kural or you pick the kural and match it with an event? This is what is lingering in my mind always! PRN
ReplyDeleteThorughly enjoyed
ReplyDelete