Search This Blog

Nov 5, 2016

சூரசம்ஹாரம்

 சூரசம்ஹாரம் 

இன்று சூரசம்ஹாரம். முருகன் சூரபத்மனை அழித்து, திருச்செந்தூரில் குடிகொண்ட நாள். 
அறுபடைவீடுகள் பற்றி முன்னமேயே பதித்திருந்த ஒரு கவிதையின் ஒரு பகுதியை  இந்நாளில் நினைவுக்கு கொண்டுவந்து முருகப்பெருமானை வழிபடுகிறேன்.

SURASAMHAARAM
Today is Sura Samharam- the day when Muruga vanquished Surapadman (Suran ), using the Vel , blessed and given to him by Parvathi. Suran, in a bid to escape,  took the shape of tree which Muruga split into two. Based on a request by the repentant Suran, he converted one half into his Seval(cock) Flag and the other half into a Peacock which he used for ambulating. After killing Surapadman, Lord Muruga took his seat at   Thiruchendur , on the shores of Bay of Bengal.

அன்புடன்
ரமேஷ்
திருச்செந்தூர்

 பார்வதி    தேவியிடம்    வேல்பெற்று   சூரனை

இருபாதி    யாகப்  பிளந்துஒருபாதியை

கொக்கருகோ *   எனக்கூவி    அறியாமைத் துயில்  கலைக்கும்

குக்குடக்**   கொடியாக   வும்

மற்றுமொரு    பாதியை    திக்கெட்டு    திசையெங்கும்

சுற்றிவரும்    மயிலாக    வும்-    ஏற்றருளி

கடலாடும்    கரையோரச்    செந்தூரில்   குடிகொண்டாய்  

சுடலாடி***   பெற்றமக  னே !
          
                    *  கொக்கருகோ =கொக்கு+அறு + கோ

                                                      ="கொக்கு வடிவில் வந்த அரக்கனைக்

                                                        கொன்றவனே"

                     ** குக்குடம் = சேவல்  *** சுடலாடி -- மயானத்தில் ஆடுபவன்


No comments:

Post a Comment