Search This Blog

Nov 4, 2016

குறள் மேல் வைப்பு வெண்பா - 12

குறள்  மேல் வைப்பு வெண்பா - 12

கற்புடைமை அதிகாரத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கதையாக , சதி அனசூயாவின் கதையை  சென்ற குறள்  மேல் வைப்பு வெண்பாவில் சொல்லி இருந்தேன். பிறகுதான் நினைவுக்கு வந்தது, வள்ளுவரின் மனைவி வாசுகியைப் பற்றி கூறப்படும் ஒரு நிகழ்வு! *

வள்ளுவர் வீட்டினுள் அமர்ந்து குறளமுதம் வடித்துக்கொண்டிருக்கிறார். வீட்டின் பின்புறத்தில் அவர் மனைவி வாசுகி , குடமொன்றைக் கயிற்றில் கட்டி , ராட்டினம் மூலம் , கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள். 
அப்போது வள்ளுவர் அவளை " வாசுகி, இங்கு வா " என்று குரலெடுத்துக் கூப்பிட  , வாசுகியும் உடனே பாதி தூரம் மேலே வந்துகொண்டிருந்த நீர்க்குடத்தை  அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு உள்ளே ஓடுகிறாள்.  
என்ன ஆச்சரியம்.! நீர்க்குடம், அப்படியே கீழே போகாமல் பாதி உயரத்திலேயே நிற்கிறது!.
இதுவல்லவோ கற்பின் வலிமை! இப்படிப்பட்ட மனையாளைப் பெற்ற வள்ளுவருக்கு , அவருக்கு கிடைத்த செல்வங்களுக்குள்ளே சிறந்தது இதுவன்றோ?

( * The Story :
Vasuki was Valluvar's wife. She was fully devoted to him. Of the several instances which bring out the power of this chaste woman, the one most quoted is this :
Once when Vasuki was drawing water from the well at the backyard of her house, Valluvar summoned her to come immediately. On hearing him, Vasuki immediately left the pot midway and rushed inside. But, the pot full of water,  instead of falling back into the well, stood at the same place, defying the law of gravity!)

இந்த நிகழ்ச்சிக்குப் பின்தானோ வள்ளுவர் இந்தக் குறளை எழுதினார் ?

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 

இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்கிறது கீழ் வரும் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  


 
வள்ளுவன் வாவென்ன வாசுகி ஓடிவர
அள்ளுகின்ற  நீர்க்குடமே அந்தரத்தில் நின்றதுவாம்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 

The English version by Rev.Pop

Woman might of chastity retain, What choicer  treasure doth the world contain?
The Meaning

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
The English version of Suthaananda Bharathi

What greater fortune is for men             
Than a constant chaste woman?

1 comment:

  1. வள்ளுவனின் குறளுக்கு வாசுகியே ஒரு எடுத்துக்காட்டா , பலே

    ReplyDelete