Search This Blog

Sep 29, 2016

வாழ்வில் ஆனந்தம் - பகுதி 2


வாழ்வில் ஆனந்தம் - பகுதி 2 

In the first part, I shared the pleasures which a grandfather derives , playing with the grand children. 
How does he enjoy the rest of his time? 
Here is my experience!  I am sure yours won't be much different! 
Read, enjoy and comment!

இந்தப் பதிவின் முந்தையப் பகுதியில், பேரன் பேத்திகளுடன் விளையாடி தாத்தாக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பற்றி எழுதி இருந்தேன்.  வெளிநாட்டுகளில் வசிக்கும் மகன் / மகள் வீட்டுக்குச் செல்லும் தாத்தாக்கள் , மிஞ்சி இருக்கும் நேரத்தை எப்படிக் கழிப்பார்கள்? என்னுடைய அனுபவம் இதோ! உங்களுடையது எப்படி?


அன்புடன்

ரமேஷ் 



 
வாழ்வில் ஆனந்தம் - பகுதி 2

விடிந்தும் விடியாத  வைகறைப் பொழுதினில் 
உலவிடச்  செல்லுதல் ஆனந்தம்.
முடிகின்ற  நாளின் முன்பனி வேளையில்
முற்றத்திலே  அமர்தல்  ஆனந்தம்.

முற்றத்திலே   அமர்ந்து மகன்மனைவி மகளுடன்
மகிழ்ந்துரை யாடுதல் ஆனந்தம் .
கற்றரிந்  ததையும்பின்   உற்றறிந்த தையெலாம்  
பரிமாறிக் கொள்ளு தல்  ஆனந்தம்.

தாரகைக் கபேவின்*  காபிக் கோப்பையைக் 
கையேந்தி   நடப்பதோர்  ஆனந்தம்.
பாரங்கள் மனம்விடுத்து பாதங்களை  நீட்டி
காததூரம்  நடப்ப  தானந்தம்.
 * Star Buck
சோர்கையில் பாதையோ   ரப்பலகை  மீதமர்ந்து
வேர்வையை விடுப்பதும் ஆனந்தம்.
பார்த்திடும் காட்சிகளை   மனதிலே  இருத்திஅதை
கோர்த்தெடுத்து  எழுதல் ஆனந்தம்.

பிட்சா குடிசையின்** வடிவட்டத் தோசையினை
பிய்த்தே   தின்னுவது ஆனந்தம்.
உட்கொண்ட பிறகுநம்  உடலிலே  ஏறிய
கலோரிகளைக் கணக்கிடல் ஆனந்தம். 
 ** Pizza Hut
கோவிலுக்  குச்சென்று கும்பிட்ட  தன்பிறகு
கான்டீனைத் தேடுதல் ஆனந்தம் .
மாவுத்  தோசையுடன் சாம்பாரைச் சேர்த்ததை 
பிரசாத மாயுண்ணல்  ஆனந்தம்.

நோவொன்று  மின்றியே  ராத்தூக்கம் கண்டாலே 
மறுநாள் முழிக்கையில் ஆனந்தம். 
பாவும் வலிகள்நம் முதுகிலும் தோளிலும்
பரவாதிருந்தால் பரமா னந்தம்.

இன்றையப் பொழுது இறைவனின் அருளாலே
இனிதே முடிந்தால் அது ஆனந்தம்.
நன்றாய் நாளையப் பொழுதும் விடிந்தால்
தொடரும் நம்   வாழ்வின் ஆனந்தமே.

3 comments: