Search This Blog

May 14, 2016

தொடரு மென் காலைத் தூக்கம்.

காலையில் கிணுகினுக்கும் கடிகாரத்தின் தலயில் தட்டி அதை நிறுத்திவிட்டு, மீண்டும் போர்வைக்குள்ளே புகுந்து தூங்கும் தூக்கம் 2.0 , எல்லோரும் அனுபவித்த ஒன்று.

அதைப் பற்றி ஒரு சிறிய பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 



அரைகுறை விழிப்பில் பாதி
---- அதிகாலை   கனவில் மீதி 
திரிசங்கு உலகில் மிதந்து
----தூக்கமும் கலையும்  நேரம் 


செல்போனின்  உள்ளே உள்ள
----விழிப்  பெழுப்பும் கருவி

செல்லமாய்ச் சிணுங்கி எந்தன்
----துயில் கலைக்க முயலும்  போது


ஒரு பக்கம் ஒருக்களித்து
----ஓரமாய்ப் படுத்ததாலே

மரத்துப் போன கையை
----மெல்லவே வெளியே  நீட்டி


இருட்டிலே தட்டித் தடவி
----கைபேசி அலறியை அணைத்து

" ஒருநாள் இன்று  மட்டும்
----உறங்கிப்  பின் விழித்தால்  என்ன


இன்று செய்ய இருந்த வேலை
----மொத்தமாய் முற்றும் சேர்த்து

நன்று நான்  நாளை செய்வேன்   
----நிச்சய  மாயென்  றெண்ணி


காற்றினைப்  பதப் படுத்தும் 
----கருவியின் திறனைக் கூட்டி

குளிர் காற்று உடலைத் தழுவ
----கண்களை மீண்டும் மூடி


முகம் உடல் முற்றும் மறைத்து
----போர்வை யினுள்ளே  புகுந்து 

சுகமான கனவை வேண்டி
-----தொடரு மென் காலைத் தூக்கம்.

7 comments:

  1. Simply true.

    Very nicely written..

    S VENKATESAN

    ReplyDelete
  2. எனக்கும் இந்த அனுபவந்தான்.ஆனால் அழகாக வெளிப்படுத்த முடியவில்லையே!

    ReplyDelete
  3. It is experienced by every one ! Beautifully expressed !

    ReplyDelete
  4. நாம் அலாரம் வைக்கும்போது வேலை நாட்களுக்கு மட்டும் வைத்துவிட்டு விடுமுறை நாளைத் தவிர்த்து விடுகிறோம். ஹாஸ்டலில் வசிக்கும் ஒருவர் விடுமுறை நாளுக்கும் அலாரம் வைத்தபோது அவர் நண்பர் ஏனென்று கேட்டாராம். அதற்கு அவர் "தினமும்தான் அலாரம் அடித்தவுடன் அதற்கு அடிமையாய் உடனே எழுந்து விடுகிறோம். விடுமுறை அன்றாவது அதன் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு சுதந்திரமாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கலாமே என்றுதான்" என்றாராம். இன்னும் ஓர் ஐந்து நிமிடம்தூங்கலாமே என்று படுத்தால் அப்பொழுதுதான் நேரம் மிக வேகமாக ஓடுகிறது - விழிக்கும்போது ஒரு மணி நேரம் கடந்து விடுகிறது. PRN

    ReplyDelete
  5. Even when I hammer the alarm clock to get cuddled,my bio clock takes over!When I overlook both,the final call from my better half thriws me out!Hope now I am aure that Ramesh would definitely midify his poem to factor the above!

    ReplyDelete
  6. Even when I hammer the alarm clock to get cuddled,my bio clock takes over!When I overlook both,the final call from my better half thriws me out!Hope now I am aure that Ramesh would definitely midify his poem to factor the above!

    ReplyDelete