நேயர் விருப்பம் -1
என்னுடைய பாடல்களைப் படித்து என்னை ஊக்குவிக்கும் இரு நண்பர்கள் , சென்ற வாரம் அவர்கள் விருப்பங்களைத் தெரிவித்தார்கள் .
ஒருவர்- R.V.ரமணி-.அடுத்தவர்- S .V . ராமன். -
இருவரும் எனது சன்மார் ( sanmar ) குழும நண்பர்கள்.
ரமணி அவருக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் ( கீழ்க்கண்ட) லிங்க்-ஐ அனுப்பி, " இந்த ராகத்திற்குப் பொருத்தமாக பாடல் இயற்ற முடியுமா ? " என்று கேட்டிருந்தார்.
https://youtu.be/MFQvEfKgaLk
இது தொண்டரடிப் பொடியாருடைய பாசுரங்கள் கொண்ட ஒரு திரைப்படப் பாடல்.
ராமன், தமிழில் " கசல் (ghazal ) போன்ற, காதலர் பிரிவுத் துயரம், காதல் தோல்வி, ஆற்றாமை ஆகிய உணர்வுகளை தெரிவிக்கும் பாடல்கள் எழுத முடியுமா ?" எண்டு வினவி இருந்தார்.
இருவரது விருப்பங்களையும் பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி அவர்கள் பாராட்டையும் பெற்றேன்
ஒன்றன் பின் ஒன்றாக இவற்றை பதிவு செய்ய இருக்கிறேன்.
முதலில் பாசுரங்களைப் பின்பற்றிய பாடல் பதிவு.
திரைப்படப் பாடல் ராகத்திலேயே பாடிப் பார்த்து கருத்தளியுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
இச்சைகள் இன்பங்கள் மறந்து
பாசபந் தங்கள் துறந்து
பிச்சை நீ போட்டயிப் பிறவிப்
பயனை யான் பெறுவதற்கே
மிச்சமுள வாழ்நாள் முழுதும்
உன்புகழ் பாடிக் கழிக்க
உச்சியில் வேங்கட மலைமேல்
உறைதிரு மாலே அருள்வாய்.
ஆயிரம் நாவுடை அரவில்
அறிதுயில் கொள்ளும் ஆண்டே!
நாயினும் கடையேன் ஆன
நானுந்தன் பாதம் பற்றி
பாயிரம் பலவும் பாடி
பாவங்கள் கழுவ விழைந்தேன்.
சேயென்னை ஏற்றே அருள்வாய்
சீரங்கத் துறையும் திருவே!

No comments:
Post a Comment